கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் யுகாதி தினத்தில் காங். முதல் பட்டியல்: சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் 22ம் தேதி யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, டெல்லியில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 125 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்துள்ளோம். மீதியுள்ள 99 தொகுதிகளுக்கான பெயர்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இதில் அவசரம் காட்ட விரும்பவில்லை. … Read more

பிரதமர் மோடி பேச்சு: உணவு பாதுகாப்பின் சவாலை சமாளிக்க சிறுதானியம் உதவும்

புதுடெல்லி: ‘உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் குறித்த சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் நமக்கு உதவும்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்மொழிவைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் உலகளாவிய சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவின் முன்மொழிவு மற்றும் முயற்சிகளால் ஐநா சபை 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது, நாட்டிற்கு மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். சிறுதானியத்தை உலகளாவிய … Read more

ராஜஸ்தானில் புதிதாக 19 மாவட்டங்கள் உதயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக 19 மாவட்டங்களை உருவாக்கி முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அசோக் கெலாட் 19 புதிய மாவட்டங்கள், 3 புதிய கோட்டங்கள் பற்றிய அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தலைநகர் ஜெய்ப்பூரை 4 சிறிய மாவட்டங்களாக பிரித்து  அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் அமைப்பது தொடர்பான பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் … Read more

ஜேபி நட்டா வீடு முன் மகளிர் காங். முற்றுகை

புதுடெல்லி: ராகுல்காந்தியை விமர்சனம் செய்த பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டு முன்பு மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். லண்டன்  சென்றிருந்த ராகுல்காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து கருத்து கூறியிருந்தார். இதனை பாஜ சர்ச்சையாக்கி வருகிறது. தனது கருத்துக்கு ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருகிறது. பாஜ தலைவர் ஜேபி நட்டா வெளிநாட்டு சக்திகளுடன் ராகுல் இணைந்து செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.     இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று … Read more

காவல்நிலையத்தை சூறையாடிய விவகாரம் சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் கைது?பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம்; இன்டர்நெட் சேவை துண்டிப்பு

சண்டிகர்: சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் கை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங், தன்னைத் தானே மதபோதகர் என அழைத்து கொள்கிறார். அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், … Read more

ஷாக்! ஒரே போட்டோவில் பல ஆதார் அட்டைகள்… குவியும் போலிகள் – எப்படி நடக்கிறது மோசடி?

ஒரு வங்கி மோசடி குறித்து, குற்றவாளிகளிடம் விசாரிக்கும்போது ஆதார் அமைப்பில் பல ஓட்டைகள் இருப்பதை டெல்லி காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு தனிநபருக்கும் ஆதார் அடையாளத்தை உருவாக்கும் போது முக பயோமெட்ரிக்ஸ் பொருத்தத்தை ஆதார் அமைப்பு மேற்கொள்ளவில்லை என்பதை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆதார் ஆணையத்திற்கு டெல்லி காவல்துறை எழுதியுள்ள குறிப்பில்,”அனைத்து ஆதார் அட்டைகளிலும் உள்ள புகைப்படங்கள் ஒரே நபருடையதாக இருந்தாலும், வெவ்வேறு நபர்களின் பெயரில் ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. வங்கியில் அவர்களின் பெயர்களை ஆதார் தரவுத்தளத்தில் … Read more

மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்குமாறு மணீஷ் சிசோடியாவுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு

டெல்லி: மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்குமாறு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் குடும்பத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். … Read more

புதிய முதலீடு திட்டம்… காதலில் தோற்றால் கை நிறைய பணம் – இதோ முழு விவரம்!

Heart Break Insurance Viral Tweet: ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் என்றால் என்ன தெரியுமா…? இது ஒரு காதல் பிரிவின் தாக்கத்தைக் குறைக்க நிதி வெகுமதிகளை வழங்கும் கொள்கையாக உள்ளது. காதலில் ஏமாற்றும் கூட்டாளிகளால் ஏற்படும் மனவேதனைகள் மற்றும் காதல் தொடர்பான பிற பிரச்சனைகளை காப்பீடு ஈடுசெய்வதாக தோன்றுகிறது. பிரேக்-அப் இன்சூரன்ஸ் மூலமாக நிதி ரீதியாகப் பயனடைந்த பிறகு, ஒருவர் தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பிரதீக் ஆர்யன் என்பவர் தனது காதலி அவரை விட்டு … Read more

பெண்களுக்கு எதிரான 1,98,000 வழக்குகள் நிலுவை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான வரதட்சணை, பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பாக 1,98,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘தேசிய மகளிர் ஆணையத்திடம் கடந்த மூன்று ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான வரதட்சணை, பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி போன்ற புகார்கள் அதிகமாக வந்துள்ளன. கடந்த 2022ல் 357 வரதட்சணை புகார்களும், … Read more

நடிகை ரம்யா மாண்டியா தொகுதியில் போட்டி?.. கர்நாடகா காங்கிரசில் பரபரப்பு

பெங்களூரு: பிரபல நடிகை ரம்யா மாண்டியா தொகுதியில் போட்டியிட உள்ளதாக கர்நாடக மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் ேபசப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளன. அந்த வரிசையில் பிரபல கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யாவை மாண்டியா ெதாகுதியில் களமிறக்க மாநில காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. இறுதி பட்டியலை தேசிய தலைமை தேர்வு செய்யும் என்பதால், வேட்பாளராக ரம்யா அறிவிக்கப்படுவாரா? … Read more