காற்று மாசு பாதிப்பு இந்தியா 8வது இடம்

புதுடெல்லி: உலகில் காற்று மாசு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடம் பிடித்துள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின் ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. மிகவும் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை சாட், 2வது இடம் … Read more

13 எழுத்தாளர் பட்டியலில் இடம் பெற்றார் சர்வதேச புக்கர் விருதுக்கு பெருமாள் முருகன் போட்டி

புதுடெல்லி: சர்வதேச புக்கர் விருதுக்கான போட்டியில் 13 எழுத்தாளர்களில் ஒருவராக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பதிப்பிக்கப்படும் சிறந்த சிறுகதை தொகுப்பு அல்லது நாவலுக்கு சர்வதேச புக்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டிற்கான சர்வதேச புக்கர் விருதுக்கான முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 13 எழுத்தாளர்களில் ஒருவராக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் இடம் பெற்றுள்ளார். … Read more

கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?: தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

புதுடெல்லி: கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும்  விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த மேம்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில்  ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள் வருமாறு: கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்ளிலும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்குகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை  … Read more

அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை: 2வது நாளாக ஆளும் கட்சி அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்க இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளன. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, லண்டனில் ராகுல் தெரிவித்த கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்கக் கோரி ஆளும் பாஜ கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2வது நாளாக முடங்கின. அமெரிக்காவின் ஹின்டன்பர்க் … Read more

பலாத்காரத்தை எதிர்த்து போராடிய சிறுமியை 34 முறை குத்திக் கொன்ற குற்றவாளிக்கு தூக்கு: குஜராத் நீதிமன்றம் அதிரடி

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் ஜெட்பூரை சேர்ந்த ஜெயேஷ் சர்வையா என்பவர்,  கடந்தாண்டு மார்ச் மாதம் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை தனது  வீட்டிற்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றதால், அந்த சிறுமியை ஜெயேஷ் சர்வையா 34  முறை கத்தியால் குத்தி  கொலை செய்தார். இவ்வழக்கை விசாரித்த ராஜ்கோட் சிறப்பு நீதிமன்றம், … Read more

அமிர்தசாஸ்-கொல்கத்தா இடையே சென்ற ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை கைது செய்தது போலீஸ்

கொல்கத்தா: அமிர்தசாஸ்-கொல்கத்தா இடையே சென்ற ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர். அகல் தக்த் விரைவு ரயிலில் கணவருடன் சென்ற பெண் பயணி மீது மதுபோதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்ததாக புகார் அளித்துள்ளனர். பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை பணியில் இருந்து நீக்கி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமிர்தசரஸில் இருந்து கொல்கத்தா நோக்கி அகல் தக்த் எக்ஸ்பிரஸ் நேற்று … Read more

காதலன் வீட்டு மாடியில் இருந்து குதித்த இளம் பெண் உயிரிழப்பு..!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது பெண் அர்ச்சனா திமான். இவர் பிரபல விமான நிறுவனம் ஒன்றில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆதேஷ் என்ற நபருக்கும் 6 மாதங்களுக்கு முன் டேட்டிங் ஆப் ஒன்று மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. ஆதேஷ் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர். ஐடி ஊழியரான இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அர்ச்சனா தனது காதலன் ஆதேஷை பார்க்க 4 நாள்களுக்கு முன்பு … Read more

அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?.. நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த திட்டம்..!

டெல்லி: அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. அவை தொடங்கியதும், இந்திய நாடாளுமன்றம் குறித்து இங்கிலாந்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷியும், மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து … Read more

2023-24 நிதியாண்டில் MGNREGA திட்டத்துக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

புதுடெல்லி: “2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்க இருக்கிறது. முதல் கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று கூடியது. இரண்டாவது நாளான இன்றும் கூட்டத்தொடர் … Read more

வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா ‘எச்3என்2’ வைரஸ் பலி 3 ஆக உயர்வு: அறிகுறியுடன் நூற்றுக்கணக்கானோர் அட்மிட்!

வதோதரா: இன்ஃப்ளூயன்ஸா என்ற தொற்று பாதிப்பால் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாகவும், நோய் தொற்று அறிகுறியுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்ற எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை மூன்றுபேர் பலியாகி உள்ளனர். குஜராத்தின் வதோதராவை சேர்ந்த 58 வயதான பெண், எச்3என்2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். … Read more