மும்பை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மல்லையா மனு தள்ளுபடி

புதுடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றம் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது. இதை எதிர்த்து மல்லையா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆளுநர் தமிழிசை..!!

ஆளுநர் தமிழிசை கூறியதாவது, மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யும் வகையில், பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இந்த மக்கள் மருந்தகங்களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டு 4-வது ஆண்டு … Read more

ராணுவ வீரர்களுக்கு பறக்கும் உடை – இங்கிலாந்து நிறுவனம் செயல் விளக்கம்

ஆக்ரா: வானத்தில் மனிதர்கள் பறந்து செல்லும் வகையில் ஜெட்பேக் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 3 விதமான ஜெட் இன்ஜின்கள் உள்ளன. ஒன்றை வானில் பறக்கும் நபர் முதுகில் மாட்டிக் கொள்ள வேண்டும். மற்ற இரண்டு ஜெட் இன்ஜின்களை கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வானில் உயரே பறந்து சென்று நினைத்த இடத்தில் தரையிறங்க முடியும். இந்த ஜெட்பேக் இயந்திரங்களை இயக்க காஸ் மற்றும் திரவ எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஜெட்பேக் இயந்திரத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த … Read more

எம்எல்ஏக்களிடம் தவறாக நடந்து கொண்ட 6 போலீசாருக்கு சிறை: உபி சட்டமன்றம் தீர்ப்பு: பேரவை கட்டிடத்தில் நாள் முழுவதும் அடைப்பு

லக்னோ: சுமார் 19 ஆண்டுக்கு முன், பாஜ எம்எல்ஏவிடம் தவறாக நடந்து கொண்ட 6 போலீசாருக்கு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை ஒருநாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த அரிதான சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, கான்பூரில் மின்வெட்டை கண்டித்து பாஜ எம்எல்ஏ சலில் வைஷ்னோய் தலைமையில் ஒரு குழுவினர் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது போலீசார் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில் சம்மந்தப்பட்ட 6 போலீசாருக்கு சிறை … Read more

தேசிய அளவில் 16 சதவீதமாக குறைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 3 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் காங்கிரஸுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களின் 180 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 8 இடம் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் திரிபுராவில் 3-ம் மேகாலயாவில் 5-ம் பெற்ற காங்கிரஸுக்கு நாகாலாந்தில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. டெல்லி, சிக்கிம், ஆந்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் மேற்குவங்க … Read more

மேகாலயாவில் பாஜ ஆதரவுடன் புதிய முதல்வராக சங்மா வரும் 7ம் தேதி பதவியேற்பு

ஷில்லாங்: மேகாலயாவில் பாஜ ஆதரவுடன் புதிய முதல்வராக கான்ராட் கே சங்மா வரும் 7ம் தேதி பதவியேற்க திட்டமிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் திரிபுரா, நாகலாந்து இரு மாநிலத்திலும் பாஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜ கூட்டணி முறிந்து தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், 60 சட்டப்பேரவை தொகுதிகளில் என்பிபி கட்சி … Read more

பெண்கள் மீது இச்சை கொண்ட ஆண்களை குறிவைத்து ஒரு இளைஞர் செய்த செயலை பாருங்க..!!

புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தங்கையின் புகைப்படம் டெலிகிராம் குழு ஒன்றில் பகிரப்பட்டு ரூ. 4,500 கொடுத்தால் 6 மணி நேரத்துக்கு புக் செய்து தங்களுடன் அனுப்பி வைக்கப்படும் என டெலிகிராம் குரூப்பில் வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. புதுச்சேரி கல்லூரி பெண்கள் என … Read more

விநியோக சங்கிலியை மேம்படுத்த வேண்டும் – குவாட் கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடெல்லி: பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ஐ.நா. சபையில் சீர்த்திருத்தங் களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு குவாட் கூட்டமைப்பின் இதர 3 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன. … Read more

“பொருளாதார நெருக்கடியில் இந்தியாவின் உதவி மகத்தானது” – இலங்கை வெளியுறவு அமைச்சர்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இலங்கைக்கு  உதவுவதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, நன்றி தெரிவித்தார். இந்தியாவின் உதவி மகத்தானது என்று கூறிய அவர் மற்ற நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செய்ததை விட  இந்தியா தனது நாட்டிற்கு செய்தது அதிகம் என்றார். இலங்கையின் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதல் நடவடிக்கையில் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா இருந்துள்ளதாக  இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். Source link

சிசோடியா ஜாமீன் மனு இன்று விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த ஞாயிறன்று சிபிஐ கைது செய்தது. சிசோடியாவின் சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதனிடையே ஜாமீன் கேட்டு சிசோடியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.