ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி…?

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறக் கூடிய இம்மாநாட்டில், காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி உரையாற்றினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி சீரழித்து வருகிறது. ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது. இது காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு சவாலான காலமாகும். எனது பயணம் பாரத் ஜோடோ யாத்திரையுடன் முடிவடைந்துவிட்டது. 2004 … Read more

மனிதர்களை போலவே கால்நடைகளுக்கு விரைவில் ஆதார் கார்டு..?

ஆதார் அட்டை என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரியும். அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண் வழங்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதற்கான விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எந்த … Read more

தென்சீன கடல் பகுதியில் சர்ச்சை நிலவும் சூழலில் இந்தோனேஷியா சென்றது ஐஎன்எஸ் சிந்துகேசரி

புதுடெல்லி: தெற்கு சீன கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்சினைகள் உள்ளன. இச்சூழ்நிலையில் தெற்கு சீன கடல் பகுதியில் சுந்தா ஜலசந்தியை கடந்து இந்திய நீர்மூழ்கி கப்பல் சிந்துகேசரி முதல் முறையாக இந்தோனேஷியா சென்றடைந்துள்ளது. ஆசிய நாடுகளுடன் தொடர்ந்து ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய போர்க் கப்பல்கள் பல இந்தோனேஷியா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு சென்றுள்ளன. … Read more

தேசிய கல்வி கொள்கையால் எதிர்கால தேவைக்கேற்ப கல்வி முறையில் மாற்றம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “புதிய தேசியக் கல்வி கொள்கை எதிர்கால தேவைக்கேற்ப நாட்டின் கல்வி முறையை மாற்றியமைத்துள்ளது,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பட்ஜெட்டில் அறிவித்த முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசு நடத்தும் 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையதள கருத்தரங்கின், 3வது கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் கல்வி அமைப்பில் நெகிழ்வுதன்மை இல்லாததால் இத்துறை மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால், புதிய தேசியக் கல்வி கொள்கையினால் இளைஞர்களின் கல்வி, திறன் மற்றும் எதிர்கால … Read more

பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட இந்தூர் கல்லூரி முதல்வர் உயிரிழப்பு – முன்னாள் மாணவர் மீது கொலை வழக்கு பதிவு

இந்தூர்: மத்தியப் பிரதேசம் சிம்ரோல் பகுதியில் உள்ளது பி.எம். பார்மஸி கல்லூரி. இங்கு அசுதோஸ் ஸ்ரீவஸ்தவா (24) என்ற மாணவர் பி.பார்ம் படித்துள்ளார். இவர் 7வது செமஸ்டரில் தோல்வியடைந்தார். இவரது மதிப்பெண் பட்டியலை பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இக்கல்லூரியின் உதவிபோராசிரியர் டாக்டர் விஜய் படேலை, ஸ்ரீவஸ்தவா கடந்தாண்டு அக்டோபர் மாதம் கத்தியால் குத்தினார். இதில் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கல்லூரி முதல்வர் விமுக்தாசர்மா (54) என்பவருக்கும், முன்னாள் மாணவர் ஸ்ரீவஸ்தவா வாட்ஸ் … Read more

டெல்லி செங்கோட்டை பகுதியில் தீவிரவாத பயிற்சிக்காக பாக். செல்ல முயன்ற 2 பேர் கைது: தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்

புதுடெல்லி: தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்து ஆயுத பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தான் செல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த ஒரு கும்பல் ஆயுத பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், அவர்கள் செங்கோட்டை பகுதியில் இருந்து பிப்ரவரி 14ம் தேதி செல்ல உள்ளனர் என்றும் டெல்லி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக … Read more

இன்னிங்ஸ் நிறைவு பெற்றதாக அறிவிப்பு – அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு?

ராய்ப்பூர்: ‘‘பாரத ஒற்றுமை யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் நிறைவு பெற்றுள்ளது’’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த 2-வது நாள் மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. பிரிவினை தூண்டப்பட்டு, ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக மத்திய … Read more

மேகாலயா, நாகலாந்தில் நாளை வாக்குப்பதிவு: ஷில்லாங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

ஷில்லாங்: மேகாலயா, நாகலாந்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மேகாலயாவின் ஷில்லாங் தொகுதியில் வேட்பாளர் மறைவால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகலாந்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவை பொருத்தவரை 60 இடங்களுக்கு பாஜ, காங்கிரஸ் உட்பட 11 கட்சிகளைச் சேர்ந்த 369 பேர் … Read more

அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது: உச்சநீதிமன்றம் கவலை

புதுடெல்லி: அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்  ‘கடுமையான குற்ற வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நபர் அரசு துறையில் துப்புரவு பணியாளராகவோ அல்லது காவலராகவோ சேர முடியாது. ஆனால் அதே போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு நபர் எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ கூட ஆகி விடலாம். அதனால் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி … Read more

ரஷ்யா விவகாரத்தில் ஒருமித்த கருத்தின்றி முடிந்த ஜி20 கூட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் மாநாடு பெங்களூருவில் நேற்று 2வது நாளாக நடந்தது. இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்தியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து விவாதிக்கவே இந்தியா விரும்பியது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் ஓராண்டு நிறைவையொட்டி, ரஷ்யாவுக்கு கண்டனம் … Read more