2024 தேர்தலுக்கு பிறகு பாஜக அழித்தொழிக்கப்படும்; லாலு பிரசாத் யாதவ் சூளுரை.!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள லாரூயாவில் நடந்த பேரணியில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, பீகாரை காட்டு ராஜ்ஜியத்தில் மூழ்கடித்ததற்கு முதல்வர் நிதிஷ் குமாரே காரணம் என்றும், ஜனதா தளத்துடனான நிதிஷ்குமாரின் கூட்டணி என்பது தண்ணீரில் எண்ணெய் கலக்க முயற்சி என்றும் அவர் கூறினார். இந்தநிலையில் 2024ம் ஆண்டுக்கு பிறகு பாஜக அழிக்கப்படும் என பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். சிறுநீரக மாற்று அறுவை … Read more

ரூ.16,800 கோடியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: 8 கோடி விவசாயிகளுக்கு நாளை ரூ.16,800 கோடியை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் 13வது தவணையாக பிரதமர் மோடி ரூ.16,800 கோடி விடுவிக்கிறார்.

நாட்டின் மொத்த பணமும் அதானியிடம் உள்ளது; ராகுல் காந்தி பொளேர்.!

காங்கிரஸ் கட்சியின் 85வது அகில இந்திய மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்றுவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநாடு மூன்றாவது நாளான இன்றுடன் நிறைவடைகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்றைய இரண்டாவது நாள் மாநாட்டில் சோனியா காந்தி உரையாற்றும்போது, பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது பயணம் நிறைவடைந்தது என கூறினார். அதையடுத்து அவர் அரசியலில் இருந்து ஓய்வு … Read more

ஜன. 13ம் தேதி வாரணாசியில் மோடி தொடங்கி வைத்த சொகுசு கப்பல் எங்கு இருக்கிறது?: 3,200 கி.மீ பயணம் நாளை மறுநாள் முடிகிறது

திப்ருகர்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த நீர்வழி சொகுசு கப்பல் தனது 50 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் திப்ருகர் சென்றடைகிறது. உலகின் மிக நீளமான நீர்வழி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ், கடந்த ஜனவரி 13ம் தேதி வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய தயாரிப்பான இந்தக் கப்பல், பாட்னா சாஹிப், புத்த கயா, விக்ரம்சிலா, டாக்கா (வங்கதேசம்), சுதர்பன், காசிரங்கா தேசிய பூங்காக்கள் வழியாக நாளை மறுநாள் (பிப். … Read more

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்!!

பெங்களூருவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை- மைசூரு இடையே பெங்களூரு வழியாக வந்தே பாரத் அதிவரைவு ரயில் இயக்கப்படுகிறது. தென் இந்தியாவில் இயக்கப்படும் ஒரே வந்தே பாரத் ரயிலான இது வாரத்தில் 6 நாட்கள் இரு மார்கங்களிலிருந்தும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மைசூருவுக்கு சென்று கொண்டிருந்தது. காலை சுமார் 10.30 மணியளவில் கிருஷ்ணராஜபுரம்- பெங்களூரு கண்டோன்மென்ட் … Read more

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிற்பகலில் திடீரென நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

குஜராத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிற்பகலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த நில நாட்களாக உலக அளவில் நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. அண்மையில்  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்திலிருந்தே மீண்டு வராத சூழலில் உலகம் முழுவதும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  ஜப்பான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, நியூ பிரிட்டன், … Read more

பறவைக்காய்ச்சல் எதிரொலி; 4,000 கோழி, வாத்து உயிருடன் அழிப்பு

பொகாரோ: ஜார்கண்ட்டில் பரவிவரும் பறவைக்காய்ச்சலால் குறிப்பிட்ட மாவட்டத்தில் 4,000 கோழி, வாத்துகள் உயிருடன் கொல்லப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதியில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட சுமார் 4,000 பறவைகள் கொல்லப்பட்டன. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி டாக்டர் பிபின் பிஹாரி மஹதா கூறுகையில், ‘லோஹஞ்சலில் உள்ள பண்ணையில் ‘கடக்நாத்’ என்ற கறுப்பு இன கோழியில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (எச்5என்1) இருப்பது உறுதி … Read more

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர்!!

72 வயது முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள கனோட் என்ற பகுதியில்தான் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் மோகன்லால் ரேகார் (72) என்பவர் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிறுமி தனியாக இருந்ததை அறிந்த முதியவர், பள்ளி ஒன்றின் கழிவறைக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அச்சிறுமி இந்த விஷயத்தை அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறினார். … Read more

வரதட்சணை கேட்டு இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்!!

திருமணமாகி 6 ஆண்டுகள் ஆனபிறகும் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சும் (25) என்ற பெண்ணுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு இலியாஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அப்பெண்ணை கணவர் வீட்டார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், கார் வேண்டும், ரூ.2.50 லட்சம் பணம் வேண்டும் என்று வரதட்சணை கேட்டு தொல்லை … Read more

2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்!

புதுடெல்லி: குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை 2- வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் … Read more