23 பெண்களிடம் ரூ.7.89 கோடி தங்கம் பறிமுதல்

திருமலை: ஐதராபாத் விமான நிலையத்தில் 23 பெண்களிடம் ரூ.7.89 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைத்திற்கு சூடான் மற்றும் சார்ஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைத்திற்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் சூடானிலிருந்து சார்ஜா வழியாக ஜி9458 விமானம் வந்தது. இதில், சந்தேகப்படும்படியான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், … Read more

அரியானா பட்ஜெட்டில் பசு பாதுகாப்புக்கு ரூ.400 கோடி நிதி

சண்டிகர்: அரியானா சட்டமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மாநில முதல்வரும் நிதியமைச்சருமான மனோகர் லால் கட்டார் தாக்கல் செய்தார். இதில், முதியோர் ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டு ரூ. 2750 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இருக்கும் அங்கன்வாடிகள் அடுத்த 2 ஆண்டுகளில் 4000 விளையாட்டு பள்ளிகளாக மாற்றப்படும். ஆண்டுக்கு ரூ.1.80 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டும் தலித் மற்றும் பிற்பட்டோர் சமூகங்களை சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள் ஸ்டார்ட் அப் … Read more

பஸ்சில் இளம்பெண் இருக்கையில் சிறுநீர் கழித்த போதை வாலிபர்: சக பயணிகள் தர்மஅடி

ஹூப்பள்ளி: கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் மது அருந்திய வாலிபர், பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம் விஜயபூரில் இருந்து மங்களூரு நோக்கி கேஎஸ்ஆர்டிசியின் ஏசி இல்லாத ஸ்லீப்பர் கோச் பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பேருந்தில் விஜயப்பூரில் இருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் இருக்கை முன்பதிவு செய்து சென்று கொண்டிருந்தார். அவரின் இருக்கைக்கு அருகில் இருந்த சீட்டில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது அருந்திவிட்டு … Read more

கனடா குடியுரிமையை துறக்கும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்: இந்தியா தான் எனக்கு எல்லாம் என உருக்கம்

புதுடெல்லி: கனடா நாட்டு குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், இந்தியா தான் எனக்கு எல்லாம் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த பிறகு தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை நேர்காணல் எடுத்த பிறகு மேலும் பிரபலமடைந்தார். ஆனால் அதேஆண்டில் … Read more

மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்கு; 6 மணிநேரம் கடற்கரையை சுத்தம் செய்த குடிமகன்கள்: விசாகப்பட்டினத்தில் நூதன தண்டனை

திருமலை: விசாகப்பட்டினத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிபட்டவர்களை கடற்கரையை சுத்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கடற்கரையை சுத்தம் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களாக விசாகப்பட்டினத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டியவர்களை பிடித்து பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் முன்பு நேற்று முன்தினம் ஆஜார் படுத்தினர். அவர்களுக்கு கோர்ட்டில் அபராத … Read more

சிறையில் அதிகாரிகள் சோதனை; சுகேஷ் அறையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான செருப்பு சிக்கியது

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் அடைக்கப்பட்டிருந்த டெல்லியின் மண்டோலி சிறை அறையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான காலணி மற்றும் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான ஜீன்ஸ்கள் கைப்பற்றப்பட்டன. இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017ல் டெல்லி போலீசார் கைது செய்தனர். போலீசாரின் எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை டெல்லியில் மண்டோலியில் உள்ள சிறையில் அடைத்தது. கடந்த … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை: 20% ஈரப்பத நெல் கொள்முதல் செய்யலாம்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்தது. காலம் தவறி பெய்த இந்த மழையால், நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து வீணாகின. இதேபோல், அறுவடை முடித்து நெல் கொள்முதல் … Read more

கனேடிய குடியுரிமையை துறக்கும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.!

தனது கனடிய குடியுரிமை தொடர்பாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். தனது வரவிருக்கும் திரைப்படமான செல்ஃபி வெளியீட்டிற்கு தயாராகி வரும் நடிகர், தனது பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். 55 வயதான நடிகர் அக்‌ஷய் குமார், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது கனடிய குடியுரிமை குறித்து சில அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை அவர் இன்று வெளியிட்டார். கனேடிய கடவுச்சீட்டு வைத்திருப்பதற்காக தொடர்ந்து விமர்சிக்கப்படும் நடிகர், முன்னணி ஊடகத்திடம், … Read more

கவர்னர் காலில் விழுந்து வழியனுப்பிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்

திருமலை: ஆந்திர ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரனை முதல்வர் ஜெகன்மோகன் வழி அனுப்பி வைத்து காலில் விழுந்து ஆசி பெற்றார். நாளை புதிய கவர்னர் பதவியேற்க உள்ளார். ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரை சட்டீஸ்கர் மாநில கவர்னராக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி விஜயவாடா அமராவதி கன்னாவரம் விமான நிலையத்தில் நேற்று நடந்தது. அப்போது போலீசாரின் அணிவகுப்பு … Read more

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில் பெண் கவுன்சிலர்கள், மாறி மாறி அடித்து கொண்டதால் பரபரப்பு: தண்ணீர் பாட்டில் வீச்சு; இருக்கைகள், வாக்குப்பெட்டிகள் நொறுக்கப்பட்டன

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கடும் அமளி ஏற்பட்டது. ஆம் ஆத்மி மற்றும் பாஜவினர் மாறி மாறி குற்றம்சாட்டி நாற்காலிகளையும், வாக்குப்பெட்டிகளையும் உடைத்தனர். டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடந்து முடிந்தது. இதில், கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை ஆட்சி செய்து வந்த பாஜவை ஆம் ஆத்மி வீழ்த்தியது. இதையடுத்து மாநகராட்சி அவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது.  தேர்தலை நடத்த தற்காலிக தலைவராக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவால் … Read more