பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தையை சேர்ப்பதற்கு 6 வயது இருக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை 6-ஆக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கைப்படி 3 முதல் 8 வயது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி நிலைகள் 5 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கு முந்தைய கல்வி (ப்ரீ ஸ்கூல்) 3 ஆண்டுகள் அடங்கும். அதன் பின் முதல் வகுப்பு மற்றும் 2 வகுப்பு கல்வி நிலை இடம் … Read more

வீட்டிற்குள் புகைப்படம் எடுத்த மர்ம நபர்கள்: போலீசிடம் அலியா பட் புகார்

மும்பை: தனியுரிமை மீதான அத்துமீறல் அதன் எல்லையை தாண்டிவிட்டது என்று நடிகை அலியா பட் ஆவேச பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு பல நடிகர், நடிகைகள் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், கடந்த சில தினங்களுக்கு முன் அவரது அனுமதியின்றி அவரது வீட்டிற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் படத்தொகுப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்தப் பதிவில், ‘நீங்கள் என்ன விளையாடுகிறீர்களா. எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை … Read more

சற்று நேரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… அறையில் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி..!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரைச் சேர்ந்தவர் அஸ்லம் (24). இவருக்கு கடந்த 19-ம் தேதி ராஜதலாப் பகுதியைச் சேர்ந்த கக்ஷன் பானு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து ராய்ப்பூர் நகரின் சாஸ்திரி பஜாரில் அமைந்துள்ள சீரத் மைதானத்தில் நடைபெற இருந்தது. பந்தல் அலங்கரிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணமகன் அஸ்லமும் … Read more

மதிப்பெண் சான்றிதழ் தராமல் இழுத்தடித்த கல்லூரி முதல்வரை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவர்..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பி.எம். பார்மசி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா (50). நேற்று மாலை கல்லூரி பணிகளை முடித்து விட்டு மாலை 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 24 வயது இளைஞன், முதல்வரிடம் வாக்குவாதம் செய்தார். உடனே சட்டென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, விமுக்தா ஷர்மா மீது ஊாற்றி தீ வைத்துள்ளார். பின்னர் கல்லூரி முதல்வர் பற்றி எரிந்த … Read more

கொரோனாவுக்கு அஞ்சி 3 ஆண்டு வீட்டிேலயே கிடந்த தாய், மகன்

குருகிராம்: குருகிராமில் கொரோனாவுக்கு பயந்து பெண் ஒருவர் தனது மகனுடன் அறையில் 3 ஆண்டுகளாக அடைந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில் சுஜன் மாஜி- முன்முன் மாஜி தம்பதியினர் 10 வயதுடைய மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா தொற்றின் போது கடை பிடித்த கட்டுப்பாடுகளை கொரோனா குறைந்த பிறகும் முன்முன் மாஜி கடைபிடித்தார். அவருடைய கணவர் தனது மனைவி நாளடைவில்  சரியாகி விடுவார் என்று அலுவலகம் செல்லத் தொடங்கினார். ஆனால், அலுவலகம் சென்று … Read more

உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு டெல்லி துணை முதல்வர் மீது சிபிஐ வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: துணை முதல்வர் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய  சிபிஐ.க்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிய, கடந்த 2015ம் ஆண்டு ‘கருத்து கேட்பு குழு’வை அமைத்தது. இக்குழு பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இந்த குழுவின் மூலமாக ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உளவு … Read more

ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் தினமும் 150 விஐபி டிக்கெட்டுகள்

திருமலை: ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் தினமும் 150 விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக, இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தருக்கு விஐபி டிக்கெட் ரூ.500 கட்டணத்தில் அனுமதிக்கப்படும். திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கும் … Read more

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மோடி புத்தகம் கட்டாயம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ‘தேர்வு வாரியர்ஸ்’ புத்தகத்தை பள்ளி நூலகங்களில் இடம் பெறச் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகள் அடங்கிய புத்தகம் ‘தேர்வு வாரியர்ஸ்’  என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அனைத்து பள்ளி நூலகங்களில் கிடைக்கச் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாநில முதல்வர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் இது தொடர்பாக … Read more

மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ராஜீவ் சிங் ரகுவன்ஷி நியமனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தரமான மருந்து விநியோகத்தை உறுதி செய்யும் பொறுப்பை வகிக்கும் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) தலைமை தாங்குகிறார். புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளிப்பது, அதன் மருத்துவ ஆய்வுகளுக்கு அனுமதி தருவது ஆகியவை டிசிஜிஐயின் பொறுப்பாகும். டிசிஜிஐ ஆக பொறுப்பு வகித்த வி.ஜி.சோமணியின் பதவிக்காலம் கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய டிசிஜிஐ ஆக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் செயலாளரும் அறிவியல் இயக்குநருமான … Read more

நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையத்தில் ஒரு மாதத்தில் சிசிடிவி கேமரா: உச்ச நீதிமன்றம் புதிய கெடு

புதுடெல்லி: நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் இன்னும் ஒரு மாதத்தில் சிசிடிவி கேமரா பொருத்தாவிட்டால் நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காவல் நிலையத்தில் விசாரணை கைதி அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும், ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கடந்த 2020ம் ஆண்டு … Read more