Beef சாப்பிட தடை! ஆபிஸ் முன் Beef திருவிழா நடத்தி போராட்டம்..பின்னணி என்ன?

Beef Ban Protest Kerala Bank Employees : கேரளாவில் இருக்கும் கெனரா வங்கியில், மாட்டிறைச்சி சாப்பிட மேலாளர் தடை விதித்திருக்கிறார். இதை எதிர்த்து, ஊழியர்கள் நூதன முறையில் நடத்திய போராட்டம் வைரலாகி வருகிறது.

மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் துணை முதல்வருடன் அமித் ஷா சந்திப்பு

மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு மும்பை சென்றார். தெற்கு மும்பையில் உள்ள சகயாத்ரி விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த அவரை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில பாஜக தலைவர் ரவீந்திர சவாண் உள்ளிட்டோர் நேற்று காலையில் சந்தித்தனர். இதையடுத்து அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது மும்பை லாக்பாக் பகுதியில் ‘லால்பாக்சா ராஜா’ பந்தலில் … Read more

குறைந்த முதலீடு! 1 லட்சம் லாபம் தரும் அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம் பலருக்கும் பாதுகாப்பான அதே சமயம் உத்தரவாதமான வருமான ஆதாரமாக உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனுக்கள் மீது நாளை விசாரணை

புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே செப்டம்பர் 1 வரை விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த காலக்கெடுவை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி ராஷ்டிரிய ஜனதா … Read more

ஆன்லைன் கேமிங் சட்டம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பெங்களூரு: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஆன்லைனில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவோருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் கேமிங் நிறுவனமான ‘ஏ23’, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை … Read more

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் பாதிப்பு: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்

புதுடெல்லி: ஜிஎஸ்டி விகித சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள மத்​திய அரசு தீவிர நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இதனால், மாநிலங்​களுக்கு சுமார் ரூ.1.5 லட்​சம் கோடி முதல் ரூ.2 லட்​சம் கோடி வரை வரு​வாய் இழப்பு ஏற்​படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்​து, மாநிலங்​களுக்கு ஏற்​படும் வரு​வாய் பாதிப்பை ஈடு செய்​யும் வகை​யில் மத்​திய அரசு இழப்​பீடு வழங்க வேண்​டும் என்ற கோரிக்கை எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​கள் சார்​பில் முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, இமாச்சல பிரதேசம், ஜார்க்​கண்ட், கர்​நாட​கா, கேரளா, பஞ்​சாப், தமிழ்​நாடு, தெலுங்​கானா … Read more

பெண்கள் தொழில் தொடங்க  முதல்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு ஓரிரு மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், ஐக்​கிய ஜனதா தள தலை​வரும் முதல்​வரு​மான நிதிஷ் குமார் நேற்று சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2005-ம் ஆண்டு ஐக்​கிய ஜனதா தளம் தலை​மையி​லான அரசு பொறுப்​பேற்​றது முதலே பெண்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தற்​காக பாடு​பட்டு வரு​கிறது. குறிப்​பாக பெண்​களை தன்​னிறைவு பெற்​றவர்​களாக உரு​வாக்​கு​வதற்​காக பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் பணி​யின் தொடர்ச்​சி​யாக, பெண்​களின் நலனுக்​காக மேலும் ஒரு முக்​கிய​மான முடிவை எடுத்​துள்​ளோம். … Read more

எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்கள் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு ஆதரவு: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி அடுக்கை 4-லிருந்து 2 ஆக குறைப்பது மற்றும் வரி விகிதங்களை குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் … Read more

அலுவலக கேன்டீனில் பீஃப் உணவுக்கு நோ சொன்ன மேலாளர்: கொச்சியில் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேன்டீனில் மாட்டிறைச்சி (பீஃப்) உணவுகள் சாப்பிடவோ, சமைத்து விற்கவோ கூடாது என்று புதிதாக பொறுப்பேற்ற மேலாளர் உத்தரவிட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் நடத்திய நூதனப் போராட்டம் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், “கொச்சி கனரா வங்கியின் மேலாளராக அண்மையில் பிஹாரை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், கொச்சி கனரா வங்கியில் உள்ள கேன்டீனில் பீஃப் உணவு விற்கக் கூடாது, ஊழியர்கள் … Read more

ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன: இந்திய விமானப் படை தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இந்திய விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, “ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் இந்திய விமானப் படை உரையாற்றுவது இதுவே முதல்முறை. பஹல்காமில் தாக்குதல் நடந்த மறுநாள், மூன்று படைகளும் அதனதன் தலைமையகங்களில் கூடி தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறித்து … Read more