உ.பி உடன் ஈரானின் கோமெய்னிக்கு தொடர்பு: 19-ம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்த மூதாதையர்!
புதுடெல்லி: ஈரானில் மறைந்த பெரும் தலைவர் அதிபர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னிக்கு உத்தரப் பிரதேசத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. உ.பி.யின் பாராபங்கியின் கிராமத்திலிருந்து அவரது மூதாதையர் 19-ஆம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 70-களின் பிற்பகுதியில் ஈரானின் அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழங்கிய தலைவர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னி. அந்நாட்டில் இஸ்லாமியப் புரட்சிக்கு காரணமாக இருந்தவர் இந்த ருஹோல்லாதான். தற்போது, இஸ்ரேலுடன் ஈரானுக்கு நடைபெறும் போருக்கு இடையே கோமெய்னி ஒரு வெளிநாட்டவர் எனும் சர்ச்சை … Read more