இவன் மனிதனா… மனித மிருகமா…காதலி உடலை வெட்டி பிரிட்ஜில் வைத்து 20 நாட்களாக தினமும் ரசித்து பார்த்து வந்த கொடூர காதலன்!!

மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லிக்கு வந்த காதல் ஜோடி, தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் … Read more

லடாக் எல்லையில் 3டி பிரின்டிங் மூலம் ராணுவ பாதுகாப்பு கட்டமைப்பு

புதுடெல்லி: லடாக்கில் கடந்த 2020 மே மாதம் மோதலில் ஈடுபட்ட பின்னர், எல்லையில் இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், லடாக் எல்லையில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறுகையில், ‘ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் குறுகிய கால அளவில் தேவையான கட்டுமானங்களை மேற்கொள்ள முடிகிறது. சோதனை … Read more

ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து முன்கூட்டிய ஏற்பாடுகளுடன் பணமதிப்பிழப்பு அமலானது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, முன்கூட்டிய ஏற்பாடுகள் செய்த பிறகே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஒன்றிய அரசு ரூ. 1000, ரூ. 500 நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திடீரென அமல்படுத்தியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள்  அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் … Read more

டிராய் ஆணையத்தின் புது உத்தரவு நடைமுறைக்கு வந்தால்…இனி 'ட்ரூ காலர்' நமக்கு தேவையில்லை..!!

இன்றைய நவீன யுகத்தில் செல்போன் இல்லாமல், தனி மனிதனால் வாழ முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த செல்போனில் வரும் அழைப்புகள், இதுவரை நாம் சேமிக்காத நம்பரைக் கொண்டிருந்தால், வெறும் போன் நம்பர் மட்டுமே செல்போன் முகப்பு பக்கத்தில் நமக்கு கிடைக்கும். அந்த எண்ணிற்கான நபரை தெரிந்து கொள்ள விரும்பினால், ட்ரூகாலர் செயலியை பயன்படுத்த வேண்டும். தற்போது அதற்கான மாற்று வழிகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்துள்ளது. இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் இந்த … Read more

வரும் 29-ந்தேதி முதல் ட்விட்டரில் மீண்டும் ப்ளூ டிக் சேவை..!!

எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ட்விட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த ட்விட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என உறுதிப்படுத்தி கொள்ள, பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 … Read more

விமான பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயமல்ல – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 501 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,561 ஆக குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோரில் 0.02 சதவீதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் … Read more

விமானத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை அணியாதவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் பெருமளவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். விமான பயணத்தின்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விமான பயணத்தின்போது முக கவசம் அணிவது … Read more

ரவுடிகள் மூலம் மிரட்டி மதமாற்றம் பாதிரியார்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஹூப்பள்ளி: கர்நாடகாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராக ஷிக்காலிகர்கள் உள்ளனர். இந்த பிரிவை சேர்ந்த ஒரு தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. கணவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி மனைவி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு ஒப்புக்கொள்ளாத கணவன், ஷிக்காலிகர் வகுப்பு தலைவர்களிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து, அந்த வகுப்பு தலைவர்கள் ஹூப்பள்ளி போலீஸ் நிலையம் சென்று, ‘ஷிக்காலிகர் வகுப்பை சேர்ந்தவர்களை கிறிஸ்தவ அமைப்பினர் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்.,’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புகார் அளித்த சம்பத் என்பவர் கூறுகையில், ‘சில பாஸ்டர்கள் … Read more

குஜராத் தேர்தல் | "கட்சியில் இருந்தே நிறைய நெருக்கடி" – கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்

அகமதாபாத்: குஜராத் மாநில சூரத் கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் கடத்தப்பட்டு, பின்னர் மிரட்டப்பட்டு தனது வேட்புமனுவை வாபஸ் பெறவைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த வேட்பாளர் சொந்தக் கட்சியையே விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா திடீரென மாயமானார். நேற்று மாலை அவர் கடத்தப்பட்டதாக வழக்கு பதிவானது. அவர் போலீஸார் புடைசூழ தேர்தல் அலுவலகத்திற்கு வந்து மனுவை வாபஸ் வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோவை … Read more

வங்கியில் ரூ. 750 கோடி மோசடி ரோட்டோமேக் பேனா நிறுவனம் மீது வழக்கு

புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.750 கோடி மோசடி  தொடர்பாக ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.கான்பூரை தலைமையிடமாக கொண்டு ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பேனாக்களை உற்பத்தி செய்யும் ரோட்டோமேக் குழும நிறுவனங்களின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கனவே பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐஓபி வங்கி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், ரோட்டோமேக் குளோபல் நிறுவனத்தின் இயக்குனர்களான சாதனா கோத்தாரி மற்றும் ராகுல் கோத்தாரி மீது  … Read more