ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா – இங்கிலாந்து அரசு அறிவிப்பு

ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக, இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும், இந்திய வம்சாளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கும் சந்தித்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலானவர்கள் இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரையில் இங்கிலாந்தில் பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது; காணொளி மூலம் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு இன்று தொடங்கியது. காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு இன்று தொடங்கியது. காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 9 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் வெளியிடப்படுகின்றன. இந்த மாநாட்டில் 575-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. உலகம் … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கலெக்டர் திவ்யா அறிவுரை..!

மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா, ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, “வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக … Read more

இந்தியாவில் முதன்முறையாக, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி தேர்வில் பெண் அதிகாரிகள் 6 பேர் தேர்ச்சி..!

இந்தியாவில் முதன்முறையாக, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி தேர்வில் பெண் அதிகாரிகள் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ராணுவ அதிகாரியான தனது கணவருடன் பெண் அதிகாரி ஒருவரும்  தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற பெண் அதிகாரிகளில் இரண்டு பேர் ராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா

ஸ்ரீஹரிகோட்டா: ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை வெற்றிகரமாக நாசா விண்ணில் ஏவியது. எரிபொருள் கசிவு காரணமாக 45 நிமிடங்கள் ஆர்டெமிஸ் ராக்கெட் தாமதமாக ஏவப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட் அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியுள்ளது.

தொடரும் கொடுமை.. 40 மாணவர்கள் ராகிங்.. 7 மாணவர்கள் இடைநீக்கம்..!

சமீபத்தில், வேலூரில் எம்பிபிஎஸ் மாணவர்களை ராகிங் செய்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் 40 மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு ஆளாகியது அம்பலத்துக்கு வந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களை ராகிங் செய்த விவகாரம், ஒரு மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த 11-ம் தேதி இரவு, எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களை, முகமூடி அணிந்து கொண்டு வந்த மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் 7 பேர், மாடியில் … Read more

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய 12ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு..!

புதுச்சேரியில், தலைமை ஆசிரியரை தாக்கிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளை கேலி செய்ததாக புகார் வந்ததையடுத்து, மாணவனை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் கண்டித்துள்ளார். இதனால் கோபத்துடன் பள்ளியைவிட்டு வெளியே சென்ற மாணவன், மது அருந்திவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்ததால் தலைமை ஆசிரியர் அழைத்து எச்சரித்துள்ளார். இதனால் மாணவன் தாக்கியதில் பின்தலையில் காயமடைந்த தலைமை ஆசிரியர், அருகில் … Read more

முல்லை பெரியாறு அணை பராமரிப்பிற்கு மரங்களை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய வழக்கு..!!

டெல்லி: முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளுக்காக அங்குள்ள மரங்களை வெட்ட அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. கேரள அரசின் கட்டுபாட்டில் உள்ள முல்லை பெரியாறு அணையை பராமரிக்கும் பணிகளுக்காக 15 மரங்களை வெட்ட அம்மாநில வனத்துறை கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. ஆனால் கேரள மாநில அரசு திடீரென அந்த அனுமதியை ரத்து செய்தது. முல்லை பெரியாறு அணைக்கு செல்லும் வல்லக்கடவு பகுதியில் சாலை அமைக்கவும் … Read more

வாட்ஸ் ஆப் இந்தியத் தலைமை அதிகாரி அபிஜித் போஸ் ராஜினாமா

வாட்ஸ் ஆப் இந்தியத் தலைமை அதிகாரியாக இருந்த அபிஜித் போஸ் ராஜினாமா செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அப்பொறுப்பில் இருந்த அஜித் மோகன் ராஜினமாமா செய்ததையடுத்து அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவரும் மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குனரான ராஜீவ் அகர்வாலும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.இதனையடுத்து ராஜீவ் அகர்வாலுக்கு மாற்றாக சிவநாத் துக்ரால் நியமிக்கப்பட்டிருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் முக்கியக் கொள்கை … Read more

மோர்பி பாலம் விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

காந்திநகர்: மோர்பி பாலம் விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பலம் விபத்து பற்றி இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.