இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.3), மற்றும் நாளை என தொடர்ந்து நான்கு நாட்கள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி … Read more

தீங்கு விளைவித்தால் உடனடியாக பதிலடி – பாதுகாப்பு இணை அமைச்சர் திட்டவட்டம்

மும்பை: பாதுகாப்பு, போக்குவரத்து, எரிசக்தி ஆகிய துறைகளில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மும்பையில் நேற்று தொடங்கியது. இதனை, மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் பேரில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க யாருக்கும் தைரியம் இல்லை. அப்படி யாரேனும் துணிந்தால் அவர்களுக்கு உடனடி பதிலடி கொடுக்கும் திறனை … Read more

உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெறும் சமந்தாவை சந்திக்கிறார் நாகார்ஜூனா

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் முதல் மனைவியின் மகன் நாகசைதன்யா, தெலுங்குப்  படங்களில் நடித்து வருகிறார். அவரும், சமந்தாவும் சில தெலுங்கு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தபோது காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். பரஸ்பரம் நாகசைதன்யாவும், சமந்தாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டாமல், சினிமா மற்றும் வெப்தொடரில் நடிப்பதில் பிசியாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு … Read more

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது – முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி

பெங்களூரு: சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ‘கர்நாடகாவில் முதலீடு செய்யுங்கள் 2022’ என்ற தலைப்பிலான முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் தடுமாற்றத்தில் இருந்தாலும், இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது பெருமைக்குரியது. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான … Read more

சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஜார்கண்ட் முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: இன்று ஆஜராக உத்தரவு

புதுடெல்லி:  ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சாகிப்கஞ்ச், பர்ஹைத், ராஜ்மகால், மிர்சா, சவுகி மற்றும் பர்ஹர்வா ஆகிய இடங்களில் இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இரண்டு பேர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

பண மோசடி வழக்கு | ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்துக்கு அமலாக்கத் துறை சம்மன்

ராஞ்சி: பண மோசடி வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பங்கஜ் மிஸ்ரா, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more

ஒமிக்ரான் உருமாற்ற வைரசால் இந்தியாவில் புதிய கொரோனா அலை: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுடெல்லி: புதிய உருமாற்ற ‘எக்ஸ்பிபி’ வைரசால், இந்தியாவில் மீண்டும்  கொரோனா அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ், கடந்த 2  ஆண்டுகளாக உலகத்தை ஆட்டிப்படைத்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பு, பாதிப்பு, பொருளாதார சீரழிவு என பல நாசங்களை செய்து விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளால் தற்போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் இதன் தாக்குதல் தடுக்கப்பட்டு விட்டது. ஒரு சில நாடுகளில் மட்டுமே … Read more

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்புக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் ஓய்வு பெறுவதையொட்டி, அடுத்ததாக 50வது புதிய தலைமை நீதிபதி சந்திரசூட், வரும் 9ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்கக்கோரி, முர்சலின் அசிஜித் ஷேக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் … Read more

16ம் தேதி மண்டல காலம் தொடக்கம் ஆன்லைன் முன்பதிவு செய்தால் மட்டுமே சபரிமலையில் அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், சபரிமலை வரும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொலியில் நடைபெற்றது. கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் … Read more

பெட்டாசியம், பாஸ்பேட் உரத்துக்கு ரூ. 51,875 கோடி: மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.51,875 கோடி மானியம் அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் போன்ற பயிர் ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறை பரிந்துரை செய்தது. அதை ஏற்று 2022-23ம் ஆண்டுக்கு  (அக்டோபர் 1, 2022  முதல் மார்ச் 31, 2023ம் ஆண்டு வரை)  பாஸ்பேட், பொட்டாசியம்   உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய … Read more