ரஷ்யாவிடம் இருந்து 34 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது இந்தியா.!

உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு முழுவதும் வாங்கியதை விட 3 மடங்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் 34 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை மூன்றே மாதங்களில் இந்தியா பெற்றுள்ளது. ஏப்ரலில் 7.2 மில்லியன் பீப்பாய் அளவிலான கச்சா எண்ணெய் பெற்ற நிலையில், இந்த மாதம் 24 மில்லியன் பீப்பாய்களுக்கும் மேல் கச்சா … Read more

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,338 ஆக குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,828 ஆக இருந்தது. நேற்று 2,706 ஆக சரிந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,134 பேர் முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே … Read more

செப்டம்பர் 15ம் தேதிக்குள் பத்ம விருதுகள் 2023க்கான பரிந்துரைகள் வரவேற்பு; ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

டெல்லி: 2023ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த … Read more

ஹவாலா முறைகேடு: டெல்லி சுகாதார அமைச்சர் கைது

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை (57) அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தில் ஹவாலா முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரது … Read more

ஜம்முவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், ஜம்முவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. ஜம்மு மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால், பூர்மண்டல் தேவிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, ஆற்றுப் படுகைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு, ஒன்றன் மீது ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தன. Source link

காஷ்மீரின் அவந்திப்போரா பகுதியில் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை!!

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போராவில் உள்ள ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் தந்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.சம்பவ இடத்தில் … Read more

டெல்லியில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை – போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் நேற்று பலத்த காற்றுடன் திடீரென பெய்த கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனால் விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.  பல இடங்களில் மரங்கள் விழுந்து வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கரோனா பரவல் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி செல்வாக்கு அதிகரிப்பு – ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கரோனா தொற்றுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு, விலைவாசி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணிகளை வைத்து ஆய்வு நடத்தியது. அதில் தெரிய வந்த முடிவுகளை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் விதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது விலைவாசி உயர்ந்து வந்த நிலையிலும், வேலைவாய்ப்பு … Read more

ஆர்யன் கான் வழக்கில் சர்ச்சையில் சிக்கிய ஷமீர் வான்கடே சென்னைக்கு பணி மாற்றம்..!

போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை தவறாக கைது செய்த மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் மண்டல தலைவர் சமீர் வான்கடே சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் சமீர் வான்கடே மீது விசாரணை நடத்த நிதி அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சென்னை வரி செலுத்துவோர் சேவைகளின் பொது இயக்குனநராக  உடனடியாக பணியில் சேர மத்திய … Read more

மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை : ஒன்றிய அரசு

டெல்லி : உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் அதன் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததால் அந்த நாட்டில் மருத்துவம் படித்து வந்த 10,000த்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து  வரப்பட்டனர். அவர்களில் 1900க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 3 மாதத்திற்கு மேலாக போர் நடந்து வருவதால் தங்களது படிப்பை தொடர முடியாத … Read more