ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியது. 4-வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி இந்திய அணியை முதலில் ஆட பணித்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59ரன்களும் சூர்யகுமார் யாதவ் 68ரன்களும் எடுத்தனர். ஹாங்காங் அணி 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் … Read more

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு மதரசா பள்ளி இடிப்பு: அசாமில் அதிரடி

கவுகாத்தி: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அசாமில் செயல்பட்டு வந்த மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. அல்-கொய்தா, அன்சாருல் பங்களா தீம் என்ற ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக, அசாம் மாநிலம், போங்கைகான் மாவட்டத்தில் உள்ள மதரசா பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அன்சாருல் பங்களா அணியின் 2 வங்கதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களுக்கு இவர் கடந்த 4 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்தது வந்தது தெரியவந்தது. இதையடுத்து,  வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத … Read more

உயிரிழந்த நடிகை சோனாலி போகத்தின் உடலில் 46 இடங்களில் காயம் இருப்பதாக புதிய தகவல்!

மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்ட பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத்தின் உடலில் 46 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. மர்மமான முறையில் சோனாலி இறந்ததும் அவர் உடல் கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர் உடலுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வு சோதனையின் போது இந்த காயங்கள் பற்றி ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டாரா என மருத்துவர்கள் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். Source link

டெல்லியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங்

டெல்லி: இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் கண்டுபிடித்த செர்வாவேக் தடுப்பூசியை டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் அறிமுகம் செய்து வைத்தார். இதுவரை வெளிநாட்டில் இருந்தே தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் செர்வாவேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா தளபதிகள் சந்திப்பு.. லடாக்கில் பதற்றத்தை தணிக்க ஆலோசனை..!

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 16 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இருநாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் தங்கள் படைத்தளபதிகளுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அசல் எல்லைக் கோடு பகுதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியை கடைபிடிக்க இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை கடைபிடிக்கவும் இதுபோன்ற முன்னறிவிக்கப்படாத ராணுவ பேச்சுவார்த்தைகள் … Read more

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 19% அதிகரிப்பு: ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம். தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து ரூ.8,386 கோடியானது என தெரிவித்துள்ளது.   

மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துவதாக கூறியுள்ளார். புலித்தேவனின் வீரமும், உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருவதாகவும், முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட அவர், மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி: ஒன்றிய அரசின் அறிவிப்பால் ரயில் பயணிகள் அதிர்ச்சி..!!

டெல்லி: முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் கேன்சலேஷன்  கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதாவது முதல் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக பிடிக்கப்படும் 240 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து 252 ரூபாயாக வசூலிக்கப்படும். அதேபோல இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் 200 ரூபாயுடன் … Read more

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்..!

ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்.! தலைநகர் டெல்லி விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது ஆட்டோபைலட் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தகவல் டெல்லியிலிருந்து மராட்டிய மாநிலம் நாசிக்கிற்கு புறப்பட்ட விமானம் நடுவானில் மீண்டும் டெல்லி திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது. Source link

இந்தியாவில் ஒரே நாளில் 7,946 பேருக்கு கொரோனா… 37 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 7,946 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,36,339 ஆக உயர்ந்தது. * புதிதாக 37 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more