பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. பேரவை தொடங்கிய உடனே பாஜக உறுப்பினர்கள் அமளியால் கூட்டம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

திருக்குறளின் ஆன்மாவை சிதைத்தவர் ஜியு போப். ஆளுநர் ரவி

புதுடெல்லி: திருக்குறளில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே சிதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். தலைநகர் டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் (Delhi Tamil Education Association – DTEA) சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் ஆர்.என்.ரவி பேசியதாவது: பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற மிஷனரிக்களும் திருக்குறளின் பக்தி என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர் திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி … Read more

இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி என்.வி.ரமணா உத்தரவு

டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்சனையை ஆராய நிபுணர் குழு அமைக்கலாம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற விசாரணைகள் நேரலையில் ஒளிபரப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக விசாரணைகள், தீர்ப்புகள் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளன. சுமார் 20 வழக்குகளின் விசாரணையும், தீர்ப்பும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளன. லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் நேஷனல் இன்ஃபமேட்டிக்ஸ் மையத்தின் வெப்காஸ்ட் போர்டல் வாயிலாக காலை 10.30 மணிக்கு நேரலை தொடங்குகிறது. தேர்தல் இலவசங்கள் குறித்த வழக்கின் மீதான உத்தரவு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு இன்று நேரலையில் வெளியாகிறது. உச்ச நீதிமன்றத்தின் 48வது நீதிபதியான என்வி ரமணாவின் பணிக்காலத்தின் கடைசி நாள் இன்று. ஓய்வு … Read more

அசாமில் 10ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 34 பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை முடிவு..!!

திஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 34 பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின் நடவடிக்கைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 56.49 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த தேர்வில் 34 அரசு பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். இந்த 34 பள்ளிகளையும் மூட … Read more

பஞ்சாப் பயணத்தில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு எஸ்.பி. காரணம் – 5 பேர் கொண்ட ஆய்வுக் குழு அறிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பயணம் செய்தபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்கு, பெரோஸ்பூர் சீனியர் எஸ்.பி தேவையான நடவடிக்கை எடுக்காததே காரணம் என உச்ச நீதிமன்றத்தில் 5 உறுப்பினர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி சென்றார். அவர் செல்லும் பாதையில் விவசாயிகள் திடீரென மறியல் செய்ததால், மேம்பாலம் ஒன்றில் பிரதமரின் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா… 68 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 10,256 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,89,176ஆக உயர்ந்தது. * புதிதாக 68 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை … Read more

மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் – தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் அறிவுரை

திருப்பதி: திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் 2 நாட்கள் நடைபெற உள்ள தேசிய தொழிலாளர் நல மாநாட்டை நேற்று மத்திய சுற்றுச்சூழல், வனம், தொழிலாளர் நலம், மற்றும் ஊரக வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் வளர்ச்சி பெற்ற, வலிமை பெற்ற நாடாக நம் நாடு … Read more

ஜாமீனில் வெளியே வந்த பாஜ எம்எல்ஏ மீண்டும் கைது

ஐதராபாத்: முகமது நபிகள் குறித்து இழிவாக பேசியதாக தெலங்கானாவில் பாஜ எம்எல்ஏ ராஜா சிங்கை கடந்த 23ம் தேதி அம்மாநில போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போலீசார் அவரை கைது செய்யாததால் அன்றைய தினமே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜாமீனில் வந்த எம்எல்ஏ ராஜா சிங், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் மகன் ராமராவ், வாக்கு வங்கி அரசியலில் … Read more

அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான மனு – மத்திய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. முப்படைகளில் 17.5 வயது முதல் 21 வரையிலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. … Read more