போரால் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்வி தொடர அனுமதி: கட்டணத்தை அரசு ஏற்பதாக முதல்வர் மம்தா அறிவிப்பு

புதுடெல்லி: போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளில் கல்வியைதொடர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணத்தையும் அரசு ஏற்கும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்த போரால் உக்ரைனில் பயின்று வந்த 19,000 இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வந்தது. அவ்வாறு நாடு திரும்பியவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள், பாதியில் நாடு திரும்பி உள்ளனர். அதனால், தங்கள் … Read more

தேர்தல் தோல்விக்கு சோனியா மட்டுமே காரணம் இல்லை- ப.சிதம்பரம் பேட்டி

புதுடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதால் சோனியா காந்திக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பல காங்கிரஸ் தலைவர்களை போலவே சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி, பிரியங்கா பதவி விலக முன் வந்தனர். ஆனால் இதை அகில … Read more

கைதிகளை உறவினர்கள் சந்திக்கலாம்: சிறைத்துறை அனுமதி

சிக்கமகளூரு: கொரோனா தொற்றால் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால், கைதிகளை உறவினர்கள் சந்திக்க சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சிக்கமகளூரு மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரானா  காரணமாக இந்த கைதிகளை நேரடியாக சந்திப்பதற்கு சிறைச்சாலை துறை அனுமதி மறுத்திருந்தது. இதையடுத்து சந்திக்க வேண்டி வருபவர்கள் அங்கு வந்து அனுமதிபெற்று வீடியோ கால் மூலம் சந்தித்தனர்.இந்நிலையில் தற்போது கொரானா  முற்றிலும் குறைந்து உள்ள … Read more

'பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம்' – எந்த மாநிலத்தில் இந்த அறிவிப்பு?

குஜராத்தில் உள்ள பள்ளிகளில், 6 முதல் +2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் … Read more

'பாஜகவை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும்' – ப.சிதம்பரம் 

புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் எனக் கூறியுள்ளார் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் … Read more

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து!

ஹோலி பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். வசந்தகாலத் திருவிழா என்று அழைக்கப்படும் இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் இங்கிலாந்து, அமெரிக்கா, பிஜி போன்ற இந்திய மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் இப்பண்டிகை விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. ஹோலி பண்டிகையின் போது, மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என … Read more

தெலங்கானாவில் ஏர்-கன் துப்பாக்கியால் சுட்டதில் 4வயது சிறுமி உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் அடுத்த வாவிலாலா கிராமத்தில் குரங்குகளை விரட்ட வைத்திருந்த ஏர்-கன் துப்பாக்கியை 17வயது சிறுவன் இயக்கிய போது அதிலிருந்து வெளியேறிய குண்டு தாக்கியதில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரசாத் என்பவர் தன் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்ட ஆன்லைன் மூலம் ஏர்-கன் துப்பாக்கி வாங்கியதாகவும், அதை தோட்ட காவலாளி நாகராஜ் வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நாகராஜின் 17வயது மகன் வீட்டிற்கு வந்த உறவினர்களுடன் … Read more

கொரோனா அலையை திறம்பட கட்டுப்படுத்தியது இந்தியா- மத்திய அரசு பெருமிதம்

புதுடெல்லி: உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தூண்டலாம் உலகமெங்கும் கொரோனா அலை பேரலையாக வீசியது. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டது. ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா எழுச்சியை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து, எந்தவொரு நெருக்கடியும் வராமல் பார்த்துக்கொண்டது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:- மார்ச் 15-ந் தேதியுடன் முடிந்த வாரத்தில் கொரோனா சராசரி பாதிப்பு 3,536 ஆகும். உலகளாவிய பாதிப்பில் இந்தியாவின் பங்களிப்பு 0.21 சதவீதம் … Read more

மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம், சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது எனவும் கூறினார்.

இன்று சோனியா காந்தியை சந்திக்கிறார் குலாம் நபி ஆசாத் – காங்கிரஸின் அடுத்த 'மூவ்' என்ன?

காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் ஜி23 குழுவில் உள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம் அதிருப்தி குழுவில் உள்ள தலைவர்கள் கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் வரை, தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததை அடுத்து அதிருப்தி தலைவர்களின் ஜி23 குழு, குலாம் நபி ஆசாத் வீட்டில் கூடி கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தது. இப்போது காங்கிரஸ் … Read more