க்ரைம் சீரியல் பார்த்து 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த 5 சிறுவர்கள்!!

பிரபல க்ரைம் சீரியல் மூலம் ஈர்க்கப்பட்டு, சிறுவர்கள் சிலர் 7 வயது பள்ளி மாணவரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது பணம் ரூ.40,000ஐ தவறவிட்டுள்ளார். இழந்த தொகையை எப்படியாவது திரும்பப் பெற வேண்டும் என சிறுவன் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.  நண்பர்கள் பிரபல க்ரைம் தொடரை உதாரணம் காட்டி அதுபோல ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் பெறலாம் என யோசனை தந்தனர். இதனையடுத்து ஜூலை … Read more

அலியா பட்டின் தமிழ் பதிவு

மும்பை: இந்திப் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்து, சில வருடங்களாக காதலை தொடர்ந்து வந்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் இருவரும் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தற்போது அலியா பட் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், மீண்டும் ரன்பீர் கபூர், அலியா பட் ஜோடி சேர்ந்துள்ள பான் இந்தியா படம், ‘பிரம்மாஸ்த்ரா முதல் பாகம்: சிவா’. அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படம் 3 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் … Read more

கேரள தலைமை செயலகத்தில் ஷூட்டிங் நடத்த தடை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டசபை அமைந்துள்ள தலைமை செயலக வளாகத்தில், இனிமேல் சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று அந்த மாநில அரசு தடைவிதித்து இருக்கிறது. மக்கள் நெருக்கம் அதிகமான பகுதியாக இருப்பதாலும், மக்கள் மற்றும் அரசுப் பணிகள் தடையின்றி நடக்கவும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தலைமை செயலக வளாகம் உயர் பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால்,  தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சுஷ்மிதா மீது எழுத்தாளர் கடும் தாக்கு

மும்பை: நடிகை சுஷ்மிதா சென் (46), பண மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய லலித் மோடி (56) இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியான நிலையில், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பெங்காலி மொழியில் வெளியிட்டுள்ள பதிவு: சுஷ்மிதா சென்னை கொல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்தேன். என்னை கட்டிப்பிடித்தார். நான் ஆச்சரியப்பட்டேன். காரணம், இளம் வயதில் 2 பெண் குழந்தைகளை அவர் தத்தெடுத்ததுதான். இதனால் அவர் மீது அதிக மரியாதை ஏற்பட்டது. அவரது நேர்மை, … Read more

நடிகைகளை மட்டும் எளிதில் மாற்றிவிடுகின்றனர்: டாப்சி கோபம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை சம்பவங்களை வைத்து உருவான இந்தி படம், ‘சபாஷ் மிது’. டாப்சி நடிப்பில் வெளியான இதில், ஆண்கள் நிறைந்த கிரிக்கெட் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து சொல்லப்பட்டிருந்தது. மேலும், இப்படத்தில் இடம்பெறும் பாலின பாகுபாடு குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டி வருமாறு: திரையுலகில் பாலின பாகுபாடு மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஹீரோக்களுக்காக வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள், ஹீரோயின்களை மட்டும் நினைத்த நேரத்தில் மாற்றிவிடுகின்றனர். நடிகைகள் … Read more

டெல்லி போலீஸ் நூதன முயற்சி: சிக்னல் லைட்டில் கரீனா கபூர் பாடல்

புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, டிராபிக் சிக்னல் லைட்டில் கரீனா கபூர் பாடிய பாடல் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. டெல்லி காவல்துறை டிவிட்டரில் வெளியான வீடியோஒன்றில், கார் ஒன்று வேகமாக செல்கிறது. சில நொடிகளில் டிராபிக் சிக்னல் லைட்டில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் முகம் தெரிகிறது. அப்போது கரண் ஜோஹரின் ‘கபி குஷி கபி கம்’ படத்தில் இடம்பெற்ற கரீனா கபூரின் (பூ) இந்தி பாடல் வரிகள் இடம்பெறுகிறது. போலீசார் வெளியிட்டுள்ள பதிவில், ‘போக்குவரத்து விதிகளை … Read more

‘‘நான் சேர்ந்தபோது ரூ.40 கோடி, என்னை நீக்கியபோது ரூ.47,680 கோடி” – ஐபிஎல் குறித்து லலித் மோடி

புதுடெல்லி: எந்த நீதிமன்றம் என்னை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லை எனக் கூறியுள்ளார் நிதி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள லலித் மோடி. ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் … Read more

இந்தியாவிடம் பேச்சுவார்த்தை: இலகு ரக ஹெலிகாப்டர் வாங்கும் பிலிப்பைன்ஸ்

புதுடெல்லி:  பிலிப்பைன்ஸ்க்கும் சீனாவுக்கும் இடையே தென் சீன கடல் தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால்  தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் பிலிப்பைன்ஸ் இறங்கி உள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து ரூ.2770 கோடி மதிப்பு பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க கடந்த ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது. . இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து நவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க பிலிப்பைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த … Read more

இல.கணேசனுக்கு மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதனால் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் வேட்டாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர், அங்கு எம்எல்ஏ.,வாகவும், மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் … Read more

குப்பை வண்டியில் மோடி, யோகி படம்: மாநகராட்சி ஊழியர் டிஸ்மிஸ்

மதுரா: குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், மாநகராட்சி தொழிலாளி ஒருவர் குப்பை வண்டியை தள்ளிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. அந்த வீடியோவை எடுத்தவர்கள், அந்த தொழிலாளியை நிறுத்துமாறு கூறுகின்றனர். பின்னர் குப்பை வண்டியில் இருந்து பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் … Read more