மக்கள் தொகை பெருக்கம் 2023-ம் ஆண்டு சீனாவை மிஞ்சிவிடும் இந்தியா – ஐ.நா. அறிக்கை தகவல்

நியூயார்க்: உலக மக்கள் தொகை பெருக்கம் 2022 அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 12, 2022-ல் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. இந்த எண்ணிக்கையை இந்தியா அடுத்த ஆண்டு மிஞ்சிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கீட்டின்படி 2030-ம் … Read more

கள்ளக்காதல் விவகாரம் பாஜ மகளிர் அணி தலைவி தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே சிஎன்புரம் நடுவாக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி சரண்யா ரமேஷ் (27). பாலக்காடு மாவட்ட பாஜ மகளிரணி பொருளாளர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கி சடலமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், அவர் தற்கொலைக்கு முன் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் பாலக்காட்டை சேர்ந்த பாஜ பிரமுகரான பிரஜீவ் என்பருடன் தொடர்பு இருந்தது குறித்து குறிப்பிட்டு இருந்தார். ‘எனக்கும் பிரஜீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.பலமுறை … Read more

உ.பி ‘பஸ்மந்தா’ முஸ்லிம்கள் மீது பாஜக கவனம் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க திட்டம்

புதுடெல்லி: நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவை தொகுதிகள் உத்தர பிரதேசத்தில்தான் உள்ளன. அவற்றில், கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக தனி பெரும்பான்மையுடன் 2-வது முறை ஆட்சி அமைத்து சாதனை படைத்தது. எனினும், மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு முஸ்லிம் கூட பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இதே பாணியை உத்தராகண்ட், ம.பி., பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாஜக பின்பற்றியது. இத்தனைக்கும் உ.பி.யில் முஸ்லிம்கள் … Read more

அதிகரித்து வரும் சீன ஊடுருவல் பிரதமர் அமைதி காப்பது நாட்டிற்கு மிக ஆபத்து: ராகுல் கண்டனம்

புதுடெல்லி: நாட்டின் எல்லையில் சீன ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதுவும் பேசாமல் அமைதி காப்பது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டரில், “பிரதமர் பற்றிய சில உண்மைகள்: 1. சீனாவை கண்டு பயப்படுகிறார். 2. மக்களிடம் இருந்து உண்மையை மறைக்கிறார். 3. தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாத்து கொள்கிறார். 4. ராணுவத்தை … Read more

வானிலை சீரானதை அடுத்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் பனிலிங்க தரிசனம் செய்வதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இதுவரை 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் பனிலிங்க தரிசனம் செய்யும் குகை கோயில் அருகே 8ம் தேதி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேரை … Read more

உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் சிவசேனாவின் மனுக்களை உடனே விசாரிக்க முடியாது: ஷிண்டே அரசுக்கு இனி நெருக்கடி இல்லை

புதுடெல்லி:  மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜ உடன் சேர்ந்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும், ஷிண்டேவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராகவும், ஷிண்டே தரப்பில் நிறுத்தப்பட்ட கொறடாவை ஆளுநர் அங்கீகரித்ததற்கு எதிராகவும் சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மூன்று மனுக்களையும் ஜூலை 11ம் தேதி … Read more

ஜேஇஇ மெயின் தேர்வில் 14 மாணவர்கள் 100 மதிப்பெண்

புதுடெல்லி: பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. நாடு முழுவதும் 7.69 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், 14 மாணவர்கள் 100  மதிப்பெண்களை எடுத்துள்ளனர். தெலங்கானாவை சேர்ந்த 4 பேர், ஆந்திராவை சேர்ந்த 3 பேரும் நுழைவு தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதேபோல் அரியானா, ஜார்கண்ட், பஞ்சாப், அசாம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் 100 மதிப்பெண்ணை எடுத்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.9,000 கோடி கடன் பெற்று இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் மல்லையா மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதை மீறி … Read more

மேகதாது குறித்து விவாதிக்க தடைகோரிய தமிழக அரசு மனு மீது வரும் 19ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 19ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் மேகதாது குறித்து காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்க ஆணையத்தின் தலைவர் அனுமதி … Read more

காளி ஆவணப்பட விவகாரம்: லீலா மணிமேகலைக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன்

புதுடெல்லி: காளி ஆவண திரைப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. செங்கடல், மாடத்தி போன்ற ஆவண திரைப்படங்கள் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அந்த வகையில் இவர் ஜூலை 2ம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து கடவுளான காளி ஒரு கையில் எல்.ஜி.பி.டி கொடியும் மற்றொரு கையில் சிகரெட்டுடன் நிற்பது போல ‘‘காளி” எனும் ஆவண திரைப்பட … Read more