அடுத்த வாரத்தில் இந்தியா வருகிறது கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள்

பிரான்சில் இருந்து கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 2020ல் முதலாவதாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு பல குழுக்களாக இதுவரை மொத்தம் 33 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 3 போர் விமானங்கள் … Read more

'குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.. ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார்' – ஒவைசி

ஹைதராபாத்: ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, ஒவைசி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் பேசிய வீடியோ அடங்கிய ட்வீட் ஒன்றை பதிவிட்ட ஒவைசி, அதில், “ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு செல்வார்கள். மாவட்ட கலெக்டர்களாக, நீதிபதிகளாக, டாக்டர்களாக, தொழிலதிபர்களாக மாறுவார்கள். அதனை பார்க்க நான் உயிருடன் … Read more

பிப். 19 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் நாளை காலை முதல் வரும் 19 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பல மாவட்டங்களின் பள்ளி – கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் விவகாரம் தற்போது … Read more

சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும்.. 20 நிமிடத்தில் சாதாரண சைக்கிளை மின்சார சைக்கிளாக மாற்றும் புதியவகை சாதனம்! ஆனந்த் மகேந்திரா பாராட்டு! <!– சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும்.. 20 நிமிடத்தில் சா… –>

சாதாரண சைக்கிளை மின்சார வாகனமாக மாற்றும் வகையிலான பேட்டரி சாதனத்தை கண்டுபிடித்த நபருக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நபர் ஒருவர் தாம் கண்டுபிடித்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார். மணிக்கு 26 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த பேட்டரி சைக்கிள் கரடுமுரடான பாதையிலும் சென்றும் வருவதோடு, சேற்றில் சிக்கினாலும் … Read more

70 சதவீத சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.   முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும்  ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி … Read more

பிரான்ஸ் நாட்டில் இருந்து 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை..!

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசியாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56,000 கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்தன.அவை முறைப்படி இந்திய விமானப் … Read more

"இந்த செயல் நெறிமுறைகளுக்கு எதிரானது" – மு.க.ஸ்டாலின் கண்டனமும் மே.வ. ஆளுநரின் விளக்கமும்

மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைத்து அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் பிறப்பித்த உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அரசின் பரிந்துரைப்படியே கூட்டத் தொடரை ஒத்திவைத்ததாக மாநில ஆளுநர் ஜகதீஷ் தங்கர் விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அறிக்கை வெளியிட்ட மேற்கு வங்க ஆளுநர், அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதனால், மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. … Read more

கோவாவில் நாளை தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

பனாஜி: சின்னஞ்சிறிய மாநிலமான கோவாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு, பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவா தேர்தலில் மொத்தம் 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். … Read more

பெரும்பான்மை அடிப்படைவாதமும் சிறுபான்மை அடிப்படைவாதமும் ஒன்றா?

அந்த முஸ்லிம் நண்பர் ஐ.டி.துறை ஒன்றில் வேலை செய்கிறார். அலுவலகத்திற்கு அருகில் வாடகை வீடு தேடுகிறார். தரகர் ஒருவர் மூலம் ஒரு வீடு கிடைக்கிறது. அவர் மூலம் வீட்டு உரிமையாளரிடம் பேசி ஒப்பந்தம் போட்டு பழைய வீட்டிலிருந்து பொருட்களை சிறு லாரியில் ஏற்றி புதிய வீடு வந்து சேர்கிறார். அப்போதுதான் அவரது மனைவி புர்கா அணிந்திருப்பதைக் கண்ட வீட்டு உரிமையாளர் முஸ்லிம்களுக்கு வீடு கிடையாது, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை, கிளம்புங்கள் என்கிறார். முஸ்லிம் நண்பரோ நியாயமாக … Read more

டெல்லியில் 10ஆண்டு பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு முறையீடு தள்ளுபடி <!– டெல்லியில் 10ஆண்டு பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அ… –>

டெல்லியில் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய முறையீட்டை ஏற்கத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. டெல்லியில் காற்று மாசடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுக்கு மேல் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் இயக்கப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசு செய்த முறையீட்டை ஏற்கெனவே தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. ஒரு டீசல் வாகனம் வெளியிடும் மாசு, 24 பெட்ரோல் … Read more