குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை வசப்படுத்தினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் F-101, வசுதா, முதல் மாடி என்ற முகவரியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். 10 மணிக்கு … Read more

“சிறையில் வாழ முடியவில்லை… எனக்கு விஷம் கொடுங்கள்!” – நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு

பெங்களூரு: ‘பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது. தயவுசெய்து எனக்கு விஷமாவது கொடுங்கள்” என்று சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் இன்று நீதிபதியிடம் முறையிட்டார். பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். … Read more

“ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார்” – டி.கே.சிவகுமார் நம்பிக்கை

பெங்களூரு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2029-ஆம் ஆண்டு பிரதமராவார் என்றும், நாடு ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி இந்த நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த நாட்டை சுற்றிலும் நமக்கு எந்த நண்பர்களும் இல்லை” என்றார். … Read more

ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு: 2 வீரர்கள் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

குல்காம்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் 2வது நாளாக நடத்திய துப்பாக்கிச் சண்டையில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குல்காமின் குடார் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இரு தரப்புக்குமான கடுமையான மோதல் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்த நிலையில், பாகிஸ்தானியர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் உட்பட இரண்டு பயங்கரவாதிகளும், இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர். … Read more

கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்வு – தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டரின் பயணக் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்கிறது. அதேநேரத்தில், விபத்து நேராமல் தடுப்பதற்கான தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது உத்தராகண்ட் மாநிலம். இதில் உள்ள புனிதத்தலமான கேதார்நாத்திற்கு மூன்று இடங்களிலிருந்து ஹெலிகாப்டர் பயண வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் வசதி அளிப்பதில் இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம்(யுசிஏடிஏ) கட்டணத்தை 49 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்களின் … Read more

ரூ.45,000 வருமானம் தரும் அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம் – முழு விவரம்!

சரியான சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும், பாதுகாப்பான முறையில் தங்கள் சேமிப்பை பெருக்கவும் நினைக்கும் அனைவருக்கும் அஞ்சல் அலுவக திட்டங்கள் உதவிகரமாக உள்ளன.

50 நாட்களாக மவுனம் காக்கும் ஜெகதீப் தன்கர் பேச வேண்டுமென நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ்

புதுடெல்லி: “முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக வழக்கத்திற்கு மாறான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார். அவர் பேசுவதற்காக நாடு தொடர்ந்து காத்திருக்கிறது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அப்பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. மத்தியில் … Read more

தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி/ தூத்துக்குடி: தீவிரவாத நெட்வொர்க் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி, ஆள் சேர்ப்பு மற்றும் ஸ்லீப்பர் செல்களுக்கு எதிராக என்ஐஏ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத … Read more

திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு: சட்டம் இயற்ற தயாராகும் உத்தர பிரதேச அரசு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது. உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை … Read more

ஜார்க்கண்டில் வறுமை காரணமாக ரூ.50,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாத குழந்தை மீட்பு 

ராஞ்சி: உத்தர பிரதேசத்​தின் மிர்​சாபூரைச் சேர்ந்த ராமச்​சந்​திர ராம், ஜார்க்​கண்ட் மாநிலம் பலமு மாவட்​டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்​தில் பெய்த கனமழை​யால் இவர்​கள் தங்​கி​யிருந்த குடிசை சேதமடைந்​துள்​ளது. இந்த தம்​ப​திக்கு 4 குழந்​தைகள். ஒரு மாதம் முன்பு 5-வ​தாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதிலிருந்து தேவிக்கு உடல்​நிலை சரி​யில்​லாமல் போய் உள்​ளது. சிகிச்​சைக்கு பணம் இல்​லாத காரணத்​தால், தங்​களு​டைய ஒருமாத ஆண் குழந்​தையை ரூ.50 ஆயிரத்​துக்கு … Read more