5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாகவும், மகாராஷ்டிராவில் குறைவாகவும் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5-ம் … Read more

5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 47.53% வாக்குப்பதிவு; லடாக்கில் அதிகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5-ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.53 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் 61.26 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மாநிலம், யூனியன் பிரதேசம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்: உத்தரப் பிரதேசம்: 47.55% மகாராஷ்டிரா: 38.77% மேற்கு வங்கம்: 62.72% பிஹார்: 45.33% … Read more

அரசியலமைப்புச் சட்டம்தான் எனது வேதம்: நரேந்திர மோடி @ ஒடிசா

தென்கனல்(ஒடிசா): அரசியல் அமைப்புச் சட்டம்தான் ஆட்சிக்கான மிகப்பெரிய வேதம் என்றும், அதுதான் தனது வழிகாட்டி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் தென்கனல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “இன்று (மே 20) நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏராளமான வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது கடமைகளைச் செய்து வருகின்றனர். அனைத்து வாக்காளர்களையும், குறிப்பாக அனைத்து முதல்முறை வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தேர்தல் நேரத்தில் … Read more

கூட்ட நேரிசலால் பேரணியில் இருந்து பாதியில் வெளியேறிய ராகுல், அகிலேஷ்

பாடிலா: மக்களவை தேர்தலை முன்னிட்டு இண்டியா கூட்டணி சார்பில், உ.பி.யின் புல்பூர் தொகுதிக்கு உட்பட்ட பாடிலாவில் நேற்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான தொண்டர்கள் கூடியதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் திணறினர். இதையடுத்து, தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு தலைவர்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி தொண்டர்கள் முன்னேற முயன்றனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி ராகுல் மற்றும் அகிலேஷ் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினர். … Read more

“பணம் பறிக்க பயன்படும் சிபிஐ, அமலாக்கத் துறையை இழுத்து மூட வேண்டும்” – அகிலேஷ்

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நீங்கள் நிதி மோசடி செய்திருந்தால் அதை விசாரிக்க வருமான வரித் துறை உள்ளது. அப்புறம் ஏன் உங்களுக்கு சிபிஐ தேவை? மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். பாஜகவின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்சிகளை உடைக்க அவை உதவுகின்றன. சிபிஐ சோதனைகளை தவறாக பயன்படுத்துவதன் … Read more

தேசிய கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை பெரும் சரிவு!

முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை பெரிய அளவில் சரிந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், என்சிபி, சிபிஐ (எம்) ஆகிய கட்சிகளிலிருந்து இம்முறை 78 முஸ்லிம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2019-ன் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 115 ஆக இருந்தது. இம்முறை தேசிய அளவில் அதிகபட்சமாக பகுஜன்சமாஜ் கட்சி 35 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதில் உத்தர … Read more

5-ம் கட்ட மக்களவை தேர்தல்: மாயாவதி முதல் அம்பானி வரை வாக்களித்த பிரபலங்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ஜோயா அக்தார், ஃபர்ஹான் அக்தார் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு செய்தனர். வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நடிகர் அக்‌ஷய் குமார், நான் எனது இந்தியா வலிமையானதாக, வளர்ச்சியடைய … Read more

நாட்டுத் துப்பாக்கிகள் தயாரான உ.பி.யில் பீரங்கி குண்டுகள் தயாராகின்றன: அமித் ஷா பெருமிதம்

லலித்பூர்: ஒரு காலத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட உ.பியில் இன்று பீரங்கி குண்டுகள் தயாராகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மக்களவைத் தொகுதியில் பாஜக எம்.பி. அனுராக் சர்மா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து லலித்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும் யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராகவும் ஆன பிறகுதான் உ.பி. வளர்ச்சி அடையத் தொடங்கியது. … Read more

ஜோன்பூர் அத்தலா மசூதி ஒரு கோயிலாக இருந்தது: தொல்லியல் ஆய்வு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உ.பி. சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் சொத்தாக உள்ளது. இந்நிலையில் இந்த மசூதி முன்பு கோயிலாக இருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ரா மற்றும் மதுராவில் இதுபோன்ற வழக்குகளால் பிரபலமான வழக்கறிஞர் அஜய் பிரதாப்சிங், இந்த வழக்கையும் தொடுத்துள்ளார். ஜோன்பூரின் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் இதற்கான மனு … Read more

12 ஆண்டுக்கு முன்பு நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள்: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நிர்பயாவுக்கு நீதி கிடைக்க நாம் போராடினோம், இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள் என்று ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் உள்ள முதல்வர் கேஜ்ரிவாலின் இல்லத்துக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி சென்றார். அங்கு கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை கொடூரமாக தாக்கியதாக டெல்லி போலீஸில் ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தார். உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்: அதன் அடிப்படையில் பிபவ் குமாரை் டெல்லி … Read more