மக்களவை தேர்தல் 2024… 5ம் கட்ட வாக்குபதிவு… தொகுதிகள்… முக்கிய வேட்பாளர்கள் விபரம்..!

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 31,000 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

மும்பை: வளர்ந்த இந்தியா தூதர்கள் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்திய ரயில்வேயில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. முந்தைய அரசு ரயில்வே துறையைபால் கறக்கும் பசுவாகத்தான் பார்த்தது. ஆனால், மோடி ஆட்சியில் ரயில்வே முழு வளர்ச்சியடைந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் 5,300 … Read more

ஆம் ஆத்மி பெண் எம்.பி.யை தாக்கிய வழக்கில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது

புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள கேஜ்ரிவால் வீட்டுக்கு ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், ஸ்வாதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாக டெல்லி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பிபவ் குமார் மீது கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், … Read more

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்: ரூ.100 கோடி தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் – தேவராஜ் கவுடா குற்றச்சாட்டு

பெங்களூரு: மஜத கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் ரூ.100 கோடி தருவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என்று பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடா குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் … Read more

மம்தா பற்றி தரக்குறைவான விமர்சனம்: பாஜக வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

மேற்குவங்கத்தில் வரும் 25-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் அபிஜித் கங்கோபத்யாய் போட்டியிடுகிறார். இவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. சமீபத்தில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். ஹால்டியா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி அபிஜித் கடுமையாக விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் புகார் … Read more

உ.பி.யில் பெற்றோர் வாக்களித்தால் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்: தனியார் பள்ளி குழுமத்தின் திட்டத்துக்கு பாராட்டு

உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவை கூட்ட ஒரு கல்விக் குழுமம் பின்பற்றும் உத்தி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளுக்கு ஏழுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் 5-ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு உ.பி தலைநகர் லக்னோவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பொதுத்தேர்தலுக்கு மறுநாளான மே 21-ல் ஆசிரியர் பெற்றோர் கூட்டங்கள் எங்களது அனைத்து பள்ளிகளிலும் … Read more

“நானும் ராகுலும் போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்” – பிரியங்கா காந்தி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி. இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் அது குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார். “ரேபரேலி தொகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நான் பரப்புரை மேற்கொண்டு வருகிறேன். எங்கள் குடும்பத்துக்கு ரேபரேலியுடன் இணக்கமான உறவு உண்டு. அதனால் இங்கு நாங்கள் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். … Read more

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்: ஜெ.பி. நட்டா

காங்க்ரா(இமாச்சலப் பிரதேசம்): நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, “இங்கு நிரம்பி வழியும் உற்சாகம் மற்றும் ஆற்றலைப் பார்க்கும்போது, இந்த தொகுதியின் பாஜக வேட்பாளரான ராஜீவ் பரத்வாஜ் வெற்றிபெறப் போவது உறுதி என்ற தீர்மானம் ஏற்பட்டுள்ளது. ஜூன் … Read more

பிரஜ்வல் மீது சட்ட நடவடிக்கைகளை அரசு தொடர வேண்டும்: மவுனம் கலைத்த தேவகவுடா

பெங்களூரு: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சாத்தியமான அனைத்து சட்ட வழிகளையும் அரசு தொடர வேண்டியது அவசியம் என்று அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றதாகவும், அவர் ஜெர்மனியில் இருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் … Read more

ராமர் கோயிலை காங். இடிக்குமா? – மோடி மீது தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

மும்பை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் கொண்டு அது இடிக்கும் என்று அபாண்டமாக பழிசுமத்திய நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா(யுபிடி) தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு மும்பையில் இன்று(மே 18) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா(யுபிடி) தலைவர் உத்தவ் … Read more