மே.21 வரை வடமாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: மே 21 வரை வடமாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டெல்லியின் நஜாப்கர் பகுதியில் நாட்டிலேயே அதிகமாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில், “மே 21ம் தேதி வரை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியின் பல பகுதிகள் உட்பட வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும். மே 21ம் தேதி வரை உத்தரப் பிரதேசம் … Read more

மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் கைது

AAP MP Swati Maliwal Assault Case: மாநிலங்களவை எம்.பி., சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர். 

ஸ்வாதி மலிவால் மீது தாக்குதல்: கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் கைது

புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கேஜ்ரிவாலின் தனி … Read more

மோடி ஜனநாயகம் பற்றி பேசுகிறார்; ஆனால் அதன்படி செயல்படுவதில்லை: கார்கே விமர்சனம்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகம் பற்றி பேசுகிறார், ஆனால் அதன்படி செயல்படுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே மும்பையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மகா விகாஸ் அகாதி வலிமையாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் குறைந்தபட்சம் 46 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கிறோம். … Read more

“பிரதமர் மீது அவதூறு பரப்ப டி.கே. சிவக்குமார் ரூ.100 கோடி பேரம்” – பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சையில் பிரதமர் மோடி மற்றும் குமாரசாமி மீது அவதூறு பரப்ப டிகே சிவகுமார் தனக்கு ரூ.100 கோடி அளிக்க முன்வந்ததாக பாஜக நிர்வாகி புகார் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் … Read more

5-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்: இன்று மாலையுடன் நிறைவு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம் கட்டமாக நாளை மறுநாள் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட … Read more

ஜார்க்கண்டில் டெண்டர் ஒதுக்கீட்டுக்கு அமைச்சர் ஆலம்கீர் 1.5% கமிஷன் பெற்றார்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

ராஞ்சி: ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம், ஒவ்வொரு டெண்டர் ஒதுக்கீட்டுக்கும் 1.5 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளார் என்று அமலாக்கத் துறை ராஞ்சியில் உள்ள பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது. டெண்டர் ஒதுக்கீட்டுக்கு லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திர குமார் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை … Read more

கடந்த 2019 முதல் இதுவரை 400 சொத்துகளை முடக்கிய என்ஐஏ

புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, தேசிய அளவிலான தீவிரவாத வழக்குகளை விசாரித்து வருகிறது. குறிப்பாக தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்கி வருகிறது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சொத்துகளை என்ஐஏ முடக்கி உள்ளது. இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: என்ஐஏ அமைப்பின் ராஞ்சி பிரிவு, பிஹார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்புகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த … Read more

காங்கிரஸ், சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்: பிரதமர் மோடி விமர்சனம்

பாராபங்கி: ‘‘காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்’’ என்று உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டு நலனுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மறுபக்கம், நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த இண்டியா … Read more

“மேனகாவை அவமதித்த காங்” – 1981 அமேதி சம்பவத்தை சுட்டிக்காட்டி ஸ்மிருதி விமர்சனம்

புதுடெல்லி: அமேதியின் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி, அங்கு 1981-ல் நடைபெற்ற தேர்தல் வன்முறையை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது ராஜீவ் காந்திக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட மேனகா காந்தியை தாக்கியதுடன், அவரது உடைகளை கிழிக்கவும் காங்கிரஸார் முயற்சித்ததாகக் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் ஐந்தாம் கட்டமாக தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. தனது தீவிரத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே அவர் ஊடகங்களுக்கும் பேட்டிகளை அளித்து … Read more