“யோகியின் ‘புல்டோசர்’ இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” – மோடிக்கு பதிலடி கொடுத்த ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர்’ தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இண்டியா கூட்டணியினர் புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் என்பதை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், யோகியின் … Read more

‘‘எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்… அவர் ஏமாற்ற மாட்டார்’’ – சோனியா காந்தி @ ரேபரேலி

ரேபரேலி (உத்தரப் பிரதேசம்): “எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்… அவர் ஏமாற்ற மாட்டார்” என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் இன்று (மே 17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தொகுதியின் தற்போதைய எம்பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்களுடன் இருக்கும் … Read more

“தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தோரின் நிலை…” – ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய தொழிற்கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒப்பந்தங்கள் அவமதிக்கப்பட்டதாலும், சட்டத்தின் ஆட்சி புறக்கணிக்கப்பட்டதாலும் நிலத்திலும் கடலிலும் புதிய பதற்றங்களை ஆசியா காண்கிறது. இந்தச் சூழலில், தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ள நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாத … Read more

மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..

Who Is The Next Prime Minister: பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக வருவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.

கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் @ டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை, அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரையும், ஆம் ஆத்மி கட்சியையும் சேர்த்துள்ளது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. … Read more

நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம்

Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாங்கள் மீட்போம்: அமித் ஷா

அமேதி(உத்தரப்பிரதேசம்): பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது; அதனை நாங்கள் மீட்போம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசாதீர்கள்; அந்த நாட்டிடம் அணுகுண்டு இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவும் கூறுகிறார்கள். அவர்கள் பயப்பட விரும்பினால் பயப்படட்டும். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் … Read more

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்

BJP Lok Sabha Election 2024: 60 கோடி மக்களின் ஆசியுடன் மூன்றாவது முறையாக அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ரகசிய பார்முலாவை பற்றி கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

ராஷ்மிகா மந்தனாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியிருந்தார். இந்நிலையில் ராஷ்மிகாவின் அந்தப் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்திருக்கிறார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகாவின் பதிவைப் பகிர்ந்து , “மக்களுடன் இணைந்திருப்பதும் அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதை விடவும் முற்றிலும் மன நிறைவான விஷயம் வேறொன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் … Read more

காங். ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்துவிடும்: பிரதமர் மோடி

பாரபங்கி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள், ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி, “நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருபுறமும், இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய இண்டியா கூட்டணி ஒரு புறமும் உள்ளன. தேர்தல் ஒவ்வொரு கட்டமாக முடிய முடிய, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளனர். சமாஜ்வாதி … Read more