நீட் வழக்கு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூத்த வழக்கறிஞரை எச்சரித்த தலைமை நீதிபதி சந்திரசூட்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் குறுக்கிட்டு இடையூறு செய்த மூத்த வழக்கறிஞரை அறையில் இருந்து வெளியேற்றும்படி காவலர்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் விசாரித்துக் கொண்டிருந்தார். மனுதாரர்களில் ஒருவர் சார்பில் வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜராகி வாதிடும்போது, மற்றொரு மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா குறுக்கிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, ஹூடா தனது வாதத்தை … Read more