‘வலிமையான 2வது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவை’: 1991 பட்ஜெட்டை நினைவு கூர்ந்து கார்கே கருத்து

புதுடெல்லி: கடந்த 1991-ம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை நினைவு கூர்ந்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மீண்டுமொரு அர்த்தமுள்ள வலிமையான இரண்டாவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 1991 ஜூலை தாராளமயமாக்கல் பட்ஜெட் இந்திய வரலாற்றில் முக்கியமான தருணத்தை குறித்தது. அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் நிதியமைச்சர் மன்மோகன் சிங் பொருளாதார சீர்திருத்தத்தின் … Read more

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணைய வழக்கில் அம்மாநில முதல்வர் சித்தராமை யாவுக்கு எதிராக சதி செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் மீது பெங்களூரு போலீஸார்வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறி, அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் … Read more

கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்: டெல்லி மாநாட்டில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்,எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது) மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி ஆர்.பாண்டியன் இவ்வாறு கூறினார். மாநாட்டில் … Read more

நிதி இல்லாததால் ஆந்திர மாநில பட்ஜெட் தள்ளிவைப்பு: பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கடந்த பிப்ரவரியில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ரூ.2.86 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு பதவியேற்ற சந்திரபாபு நாயுடு அரசு, இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கலை செப்டம்பர் வரை தள்ளி வைத்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து பட்ஜெட் தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறியதாவது: கடந்த ஜெகன் … Read more

லட்டு பிரசாதம் தயாரிக்க தரமற்ற நெய் வழங்கிய நிறுவனத்துக்கு நோட்டீஸ்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியான சியாமள ராவ், சில நாட்களுக்கு முன் லட்டு பிரசாதம் தயாரிக்கும்மடப்பள்ளி ஊழியர்களை அழைத்து விசாரித்தார். லட்டுவில் சேர்க்கப்படும் பொருட்களை கொண்டு வரச்செய்து அவற்றை ஆய்வு செய்தார். இதில் லட்டு பிரசாதத்துக்கு டெண்டர் எடுத்திருக்கும் திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் பிரைவேட்லிமிடெட் நிறுவனம் தரமற்றநெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதுவரை இந்நிறுவனம் 68 ஆயிரம் கிலோ … Read more

நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பெங்களூரு: நீட் நுழைவுத் தேர்வில் இருந்து கர்நாடகாவுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தீர்மானத்தை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல கர்நாடகாவிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனவே முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவரின் ஒப்புதலுடன், நீட் … Read more

“காங். தேர்தல் அறிக்கையை பட்ஜெட் உரையாக நிதியமைச்சர் படித்திருக்கிறார்” – ப.சிதம்பரம்

புதுடெல்லி: “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்திருக்கிறார்” என்று மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30ல் … Read more

ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுடன் 1 கோடி நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ், ஏழைகள், நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் 1 கோடி வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் … Read more

ஆறு முறை இடம்பெற்ற தமிழ் உவமைகள் இம்முறை இல்லை: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் ஏமாற்றம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் ஆறு பொது பட்ஜெட்களில் இடம்பெற்ற தமிழ் உவமைகள் இந்தமுறை இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் டெல்லியில் படித்து வளர்ந்தவர். இவருக்கு ஆந்திராவை சேர்ந்த பாரகலா பிரபாகர் என்பவருடன் மணமாகி பாரகலா வங்கமாயி என ஒரு மகள் உள்ளார். கடந்த 2014 ஆட்சியில் பாஜகவுக்காக ஆந்திரா மாநிலம் சார்பில் மாநிலங்களவைக்கு … Read more

“பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்” – பட்ஜெட் குறித்து எஸ்பிஐ தலைவர் பாராட்டு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியிருப்பதாவது: “பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் மூலம் வங்கிகள் பலனடையும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் கிராமப் புறங்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு, சுற்றுலா, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களுக்கும் முக்கியத்துவம் … Read more