“சிஏஏ குறித்து பொய்களைப் பரப்புகிறார் மம்தா” – மேற்கு வங்கத்தில் அமித் ஷா தாக்கு

புதுடெல்லி: “மம்தா பானர்ஜி சிஏஏ சட்டம் தொடர்பாக பொய்களைப் பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகிறார். சிஏஏ சட்டத்தை அவரால் ஒருபோதும் தடுக்க முடியாது” என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பங்கானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா பேசியது: “4-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. அதாவது, 380 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் 18 இடங்களுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், நான் உங்களுக்கு … Read more

DC vs LSG | 19 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி @ ஐபிஎல்

புதுடெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த டெல்லி அணியின் ஓப்பனராக களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து கைகோத்த அபிஷேக் … Read more

2 மாதங்களில் விதிமீறல் நடவடிக்கைகள் என்னென்ன? – தேர்தல் ஆணையம் பட்டியல்

புதுடெல்லி: கடந்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் 2-வது அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த நிலையில், பொதுத் தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் அளித்த புகார்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் … Read more

வீடு, கார் இல்லை… பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு… 2019 – 2024 ஓர் ஒப்பீடு!

PM Modi Net Worth: கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இந்த 5 வருடத்தில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இதில் காணலாம்.

சொந்த வீடு, கார் இல்லை – பிரதமர் மோடி சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி

புதுடெல்லி: தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி கோடி என்றும், சொந்தமாக வீடு, கார் இல்லை என்றும் பிரதமர் மோடி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த சொத்து மதிப்பு என்பது அவரது அசையும், அசையா சொத்துகள், முதலீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்: மொத்த சொத்து … Read more

மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியும் குற்றம் இழைத்துள்ளதாக அமலாக்கத் துறை தகவல் @ ஐகோர்ட்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றச்சாட்டு இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத் துறை தனது எதிர்ப்பினை இன்று பதிவு செய்தது. வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா முன்பு ஆஜரான அமலாக்கத் துறை வழக்கறிஞர், “இந்த வழக்கில் அடுத்து தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் ஆம் … Read more

அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்கா

Lok Sabha Elections: அமேதியின்  ஷுகுல்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதி பற்றி தனது மனதில் உள்ள சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.  

அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்: அகிலேஷ்

ஜலான் (உத்தரப்பிரதேசம்): அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமானால் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஜலான் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், “நான்கு கட்ட தேர்தல் நடந்து விட்டது. பா.ஜ.க.வினர் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். இந்தத் தொகுதியில் டெல்லி அரசோ, உத்தரப் பிரதேச அரசோ இங்கு வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. நமது … Read more

5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராததால் விவாகரத்து… கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி!

Bizarre News: 5 ரூபாய் மதிப்பிலான குர்குர்ரே பாக்கெட்டை வாங்கி தராததால் தனது கணவனிடம் விவாகரத்து கேட்டு மனைவி புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு

புதுடெல்லி: விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து … Read more