டெல்லியில் 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தீப்சந்த் பந்து மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை மற்றும் குருதாக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தினுள் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் … Read more

மத்திய ஆசியாவில் இந்தியா ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சாபஹர் துறைமுக ஒப்பந்தம்…!

இந்தியாவும் ஈரானும் இணைந்து சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி நிர்வகிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது. 

வாக்களிக்க எருமை மீது வந்த பிஹார் இளைஞர்!

மக்களவை தேர்தலில் பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள உஜியார்பூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான நித்யானந்த் ராய் மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணியில் இருக்கும் ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அலோக் மேத்தா களம் காண்கிறார். இந்நிலையில், நேற்று உஜியார்பூர் தொகுதிக்குக் கருப்பு சட்டை, சாம்பல் நிற பேண்ட், பச்சை நிற துண்டை தலைப்பாகை போல் அணிந்தபடி எருமை மாட்டின் மீது ஏறி வாக்குச்சாவடிக்குச் … Read more

வேட்பு மனு தாக்கலுக்கு முன் கங்கைக் கரையில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

வாராணசி: வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக வாராணசி சென்றுள்ள பிரதமர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார். தொடர்ந்து அங்குள்ள கால பைரவர் கோயிலிலும் பிரார்த்தனை செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்தே வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் உட்பட பல மத்திய அமைச்சர்கள், … Read more

மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி 14 ஆக அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ராட்சத விளம்பரப் பதாகை சரிந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை அன்று ஏற்பட்ட புழுதிப் புயலின் தாக்கத்தின் காரணமாக அந்த விளம்பரப் பதாகை சரிந்து விழுந்தது. மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு எதிராக சுமார் 100 அடிக்கு இந்த ராட்சத விளம்பர பதாகை அமைக்கப்பட்டு இருந்தது. 40 முதல் 50 கிலோமீட்டர் … Read more

மோடி இன்று வேட்பு மனு தாக்கல் – வாராணசி செல்கிறார் சந்திரபாபு

வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பாஜகவின் தோழமை கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி, இன்று காலை விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் வாராணசி செல்கிறார் சந்திரபாபு நாயுடு. அங்கு, பிரதமர் மோடியை சந்தித்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார். பின்னர் மதியம் அதே விமானத்தில் அவர் … Read more

இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது; ஜூன் 4-க்குப் பிறகு பங்குச் சந்தை உயரும்: அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாகவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அது வதந்தி என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது. வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும் எனஅவர் நம்பிக்கை தெரிவித்தார். பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த கேள்விக்கு அமித் ஷா அளித்த பதில்: பங்குச் சந்தையை தேர்தலுடன் இணைக்க கூடாது. ஆனால்,நிலையான அரசு … Read more

சார் தாம் யாத்திரையில் மேலும் 2 பக்தர்கள் உயிரிழப்பு

டேராடூன்: சார் தாம் யாத்திரையின்போது மேலும் 2 பக்தர்கள் உத்தராகண்டில் உயிரிழந்தனர். இதையடுத்து யாத்திரையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புண்ணியத் தலங்கள் உள்ளன. இவற்றை இணைக்கும் யாத்திரை, `சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் சார் தாம் யாத்திரை கடந்த 10-ம் தேதி தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்இந்த யாத்திரையில் பங்கேற்று புனிதத் தலங்களை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த யாத்திரையின்போது மூச்சுத்திணறல் … Read more

மும்பையை துவம்சம் செய்த புழுதிப் புயல் – பேனர் விழுந்து 3 பேர் பலி, 50+ காயம்

மும்பை: மும்பை நகரில் திங்கள்கிழமை 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகரில் மாலை 3 மணி அளவில் 40 – 50 கி.மீ வேகத்தில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று … Read more

மும்பை புழுதிப் புயல் பேனர் விபத்து: பலி 8 ஆக அதிகரிப்பு

மும்பை: மும்பை நகரில் திங்கள்கிழமை 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்த 59-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையின் காட்கோபர் பகுதியில் விபத்து நிகழ்ந்த இடத்தை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விபத்து துரதிஷ்டவசமானது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் … Read more