‘பாஜக சார்பில் அபினவ் பிரகாஷ் விவாதத்தில் பங்கேற்பார்’ – ராகுல் காந்திக்கு தேஜஸ்வி சூர்யா கடிதம்

புதுடெல்லி: “பாஜக இளைஞர் அணியின் தேசிய துணைத் தலைவர் அபினவ் பிரகாஷ், உங்களோடு பொது விவாதத்தில் பங்கேற்பார்” என்று ராகுல் காந்திக்கு பாஜக இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்திக்கு, தேஜஸ்வி சூர்யா எழுதியுள்ள கடிதத்தில், “அன்புள்ள ராகுல் காந்தி, தீவிர தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க ஆர்வம் காட்டி இருப்பதற்காக நாங்கள் பாராட்டுகிறோம். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கொள்கைகள் மற்றும் … Read more

99.72% மார்க் எடுத்த பானி பூரி விற்பவரின் மகள்… வறுமையிலும் ஜொலித்த பூனம் குஷ்வாஹாவின் கதை!

National Latest News Updates: கடந்த 25 ஆண்டுகளாக வீதி வீதியாக பானி பூரி விற்பனை செய்து வருபவரின் மகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.72% மதிப்பெண் எடுத்திருப்பது பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

“4 நாளாக தண்ணீர் மட்டுமே…” – ஸ்ட்ரெச்சரில் சென்று வாக்களித்த புற்றுநோய் பாதித்த பெண்

பாட்னா: பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடிவரும் பெண் ஒருவர், இன்று (மே 13) பிஹாரில் நடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டு தனது வாக்கினை செலுத்தியது பலரையும் நெகிழச் செய்துள்ளது. நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிஹாரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிஹாரில் … Read more

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படி

CBSE 10th Result 2024 Result Declared: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் சற்று நேரத்திற்கு முன் வெளியானது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம். 

பாட்னா: சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி

பாட்னா: மக்களவை தேர்தல் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) பிஹாரில் சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 … Read more

முதல்வர் பதவியில் இருந்து கேஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) நிராகரித்தது. “கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நேர்மையானது. எனினும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சட்டப்பூர்வ … Read more

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; 87.98% தேர்ச்சி!

CBSE Class 12th Result 2024 OUT: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in மற்றும் cbse.gov.in இல் தேர்வு முடிவுகளை பெறலாம்.

மக்களவை தேர்தலில் சூடுபிடிக்கும் ராமர் கோயில் விவகாரம்!

இதற்கு முன்பு நடந்த தேர்தலின்போது அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற உறுதிமொழியை பாஜக அளித்து வந்தது. தற்போது அங்கு கோயில் கட்டப்பட்ட நிலையில் அதன் பலனை பாஜக மக்களவை தேர்தலில் பெற முயலும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த முறை 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 3 கட்டங்கள் முடிந்தும் கோயில் விவகாரம் இன்னும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இனிவரும் 4 கட்ட தேர்தலில் ராமர் கோயில் மீதான விவாதம் பிரச்சாரங்களில் முக்கிய இடம்பெறத் … Read more

CBSE 12ம் தேர்வு முடிவுகள் வெளியானது; சிபிஎஸ்இ ரிசல்ட் சரிபார்ப்பது எப்படி

CBSE 12th Result 2024 Date Released: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம். 

காலை 9 மணி நிலவரம்: 96 தொகுதிகளில் 10.35% வாக்குப்பதிவு – மேற்குவங்கத்தில் அதிகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.35 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 15.24 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 5.07 சதவீதம் பதிவாகியுள்ளது. இன்று ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக … Read more