டிடிபி வேட்பாளரின் சொத்து ரூ.5,700 கோடி: சுயேச்சை வேட்பாளரின் கையிருப்பு வெறும் ரூ.7

புதுடெல்லி: நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. அதன் விவரம்: நாளை போட்டியிடும் வேட்பாளர்களில் 476 பேர் கோடீஸ்வரர்கள். இதில் ஆந்திராவின் குண்டூர் மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சந்திர சேகரின் சொத்து மதிப்பு ரூ.5,705 கோடி. பெரும் பணக்கார வேட்பாளர் பட்டியலில் இவர் முதல் இடத்தில் உள்ளார். … Read more

“மோடி, அமித் ஷா 3-வது முறையாக ஆட்சியமைத்தால்..” – மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை

துலே (மகாராஷ்டிரா): பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் அடிமைகள் போல நடத்தப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் துலே தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ ஷோபா பச்சாவ்வை ஆதரித்து நடந்த பிரச்சார பேரணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க காங்கிரஸ் … Read more

‘சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் காங்கிரஸ் நாட்டை எக்ஸ்-ரே செய்யும்’ – ராகுல் காந்தி

புதுடெல்லி: “கோடீஸ்வரர்களிடமிருந்து டெம்போக்களில் பெற்ற பணத்தை சிலர் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சமத்துவத்தை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்” என்று ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைச் சாடியுள்ளார். அம்பானி, அதானியிடமிருந்து காங்கிரஸ் கட்சி டெம்போவில் பணம் பெற்றது என்ற மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த பத்து ஆண்டுகளாக டெம்போவில் கோடீஸ்வரர்களிடம் … Read more

“பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா?” – அமித் ஷா கேள்வி

பிரதாப்காரி: அணுகுண்டு அச்சுறுத்தலுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா என்று அமித் ஷா எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கருத்துகளுக்கு அவர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மணி சங்கர் அய்யரும், … Read more

இலவச மின்சாரம், மேம்பட்ட சுகாதாரம்: மக்களவை தேர்தலுக்கான கேஜ்ரிவாலின் ‘10 கேரண்டி’

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கான ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டார். இலவச மின்சாரம், மேம்பட்ட சுகாதாரம் போன்றவைகளை உள்ளடக்கிய அவரது உத்தரவாதங்கள் பரந்த அளவில் பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளைக் கொண்டுள்ளது என அக்கட்சியின் புகழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான ஆம் ஆத்மி கட்சியின் … Read more

பாஜக ஆட்சியில் அடுத்தது என்ன? – பிரதமர் மோடி நேர்காணல்

புதுடெல்லி: என்டிஏ கூட்டணி மக்களுக்கு அதிகாரங்களை வழங்க விரும்புகிறது, எதிர்க்கட்சிகளோ மக்களின் வளங்களை திருடப்பார்க்கின்றன என்று பிரதமர் மோடி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நாளை (திங்கள்கிழமை) நடக்க இருக்கிறது. இந்தநிலையில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம், அடுத்த முறையும் மோடி அரசே அமைவதற்கான அவசியம், தென் மாநிலங்கள் மீதான கவனம், மத அரசியல் விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆங்கில ஊடக நேர்காணலில் விரிவாகப் பேசியுள்ளார். அதன் தொகுப்பு … Read more

9 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல்

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா உட்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதன்படி 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. நான்காம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய பிரதமர் மோடி

ஹைதராபாத்: தெலங்கானாவின் மகபூப்நகரில் பாஜக பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் பெருந்திரளானோர் கூடினர். அப்போது சக்கர நாற்காலியில் வந்த இரு மாற்றுத் திறனாளி பெண்கள் கூட்டத்தின் நடுவில் சிக்கித் தவிப்பதை பிரதமர் மோடி மேடையில் இருந்து பார்த்தார். உடனே தனது உரையை நிறுத்திய அவர், “மாற்றுத் திறனாளிகள் அவதிப்படக்கூடாது, அவர்களுக்கு இடம்விடுங்கள். அவர்கள் முன்வரிசையில் அமர ஏற்பாடு செய்யுங்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார். இதைத் … Read more

இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டு தூங்கிய சிறுவன் மரணம்… மொத்தம் குடும்பத்திற்கு பாதிப்பு – ஷாக் சம்பவம்

UP Shocking News: வீட்டில் சமைத்த நூடுல்ஸ் மற்றும் சாதத்தை சாப்பிட்டு இரவில் தூங்கிய சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், சில மணிநேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம்: ம.பி.யில் காங்கிரஸ் வேட்பாளரின் சர்ச்சைக்குரிய வாக்குறுதி

புதுடெல்லி: இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வெகுமதியாகக் கிடைக்கும் என்று மத்தியபிரதேச மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மக்களவை தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நியாயப்பத்திரம் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண்களுக்காக மஹாலஷ்மி யோஜ்னா எனும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஏழைப்பெண்களுக்கு ரூ.1 லட்சம் அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து … Read more