இந்து – முஸ்லிம் பிரிவினையை உருவாக்க மோடி முயற்சி: கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பிரதமர் மோடி அடுத்த முறை இந்தியாவில் ஆட்சி அமைப்பது மிகவும் கடினம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். பிஹாரில் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் இணைந்து கார்கே செய்தியாளர்களிடம் பேசியபோது, “மோடி தெலுங்கானாவுக்கு அருகில் இருந்தபோது நான் ஆந்திராவில் பேரணிகளில் உரையாற்றிக் கொண்டிருந்தேன். கடந்த காலத்தில் அவரது பேச்சில் இருந்த பெருமை தற்போது தென்படவில்லை. மூன்று கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மோடி மீண்டும் பிரதமராவது மிகவும் கடினமாக இருக்கும் என்று … Read more

“தேர்தல் ஆணையத்தின் பதில் ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால்….” – கார்கே கருத்து

புதுடெல்லி: “வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் விவரங்களை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்து பதில் அளித்திருப்பதும், எனது பிற புகார்களைப் புறக்கணித்திருப்பதும் ஆச்சரியமாக அளிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளில் வாக்குப்பதிவு சதவீதம் தாமதமாக வெளியிடுவது, அவற்றின் வேறுபாடு இருப்பது குறித்து கவலை தெரிவித்து இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு “விளக்கம் கேட்கும் போர்வையில் பாரபட்சமான … Read more

மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க ராகுல் சம்மதம்: முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்ற காங்கிரஸ்

புதுடெல்லி: பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க தயார் என அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர்பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை … Read more

செய்தித் தெறிப்புகள் @ மே 11 – பட்டாசு தொழிலாளர்கள் அச்சம் முதல் தேர்தல் களத்தில் வார்த்தைப் போர் வரை

பட்டாசு தொழிலாளர்கள் அச்சம்!: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. அதேவேளையில், கடந்த 6 நாட்களுக்குள் நடந்த 4-வது விபத்து இது என்பதால் பட்டாசு தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அண்மையில் செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த … Read more

“மோடிதான் நாட்டை வழிநடத்துவார்” – ‘புதிய தலைமை’ குறித்த கேஜ்ரிவால் கருத்துக்கு அமித் ஷா பதிலடி

ஹைதராபாத்: “இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 2029 வரை பிரதமர் நரேந்திர மோடிதான் நாட்டை வழிநடுத்துவார்” என்று கேஜ்ரிவாலுக்கு பதிலளிக்கும் வகையில் அமித் ஷா கூறினார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “இந்த தேர்தலில் ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷாதான் பிரதமராவார்” என கூறி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஹைதராபாத்தில் … Read more

'பிரதமர் வருவாரா சொல்லுங்கள்… பொது விவாதத்திற்கு நான் தயார்' – ராகுல் கொடுத்த கிரீன் சிக்னல்

Rahul Gandi Reply For Open Debate Invitation: ஊடகவியலாளர் என்.ராம் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து பொது விவாதத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு பதிலளித்துள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி

கொல்கத்தா: பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர் ஏன் இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறித்து விளக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் சப்தகிராமில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்ட பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால், நான் சொல்கிறேன். ஆளுநர் அவர்களே… உங்களின் கட்டமைக்கப்பட்ட … Read more

2 ஆண்களுடன் பாத்ரூமில் மனைவி… அடிதடியில் இறங்கிய டாக்டர் கணவன் – பகீர் சம்பவம்

UP Shocking News: ஹோட்டல் அறையின் பாத்ரூமில் 2 ஆண்களுடன் மனைவி ஏற்கத்தகாத நிலையில் இருந்ததை கண்ட கணவன், அவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

“ஏழைகளின் குரலுக்கு செவி சாய்க்கும் அரசே நாட்டுக்குத் தேவை” – ராகுல் காந்தி

கடப்பா (ஆந்திரப் பிரதேசம்): “ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கக் கூடிய, பலவீனமானவர்களுக்கு துணை நிற்கக் கூடிய, யாருக்கும் அஞ்சாத ஓர் அரசுதான் நாட்டுக்குத் தேவை” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “அரசியலில் பல்வேறு வகையான உறவுகள் உள்ளன. சில குடும்ப உறவுகளும் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர் ரெட்டி என் தந்தையின் சகோதரரைப் போன்றவர். இந்த … Read more

மோடி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயனுக்கு சிறை: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி ப்ரெஸ் மீட்

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், வங்கதேச முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உத்தவ் தாக்ரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று அரவிந்த கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.