நாகாலாந்து மாநில லாட்டரி குலுக்கல்: “டியர் மகாநதி” குலுக்கல் ரூ. 1 கோடி யாருக்கு?
Nagaland State Lottery Result Today 18-07-2024 (DECLARED): இன்று நாகாலாந்து மாநிலத்தில் டியர் மகாநதி (Dear Mahanadi) லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Nagaland State Lottery Result Today 18-07-2024 (DECLARED): இன்று நாகாலாந்து மாநிலத்தில் டியர் மகாநதி (Dear Mahanadi) லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பிஜாபூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பிஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய எல்லைப் பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தச் சூழலில் நேற்று (ஜூலை 17) தேடுதல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள டர்ரெம் பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் வெடிகுண்டு தாக்குதலில் ராய்ப்பூரைச் … Read more
புதுடெல்லி: உ.பி.யின் பத்தேபூர் மாவட்டம் சவுரா கிராமத்தில் வசிப்பவர் விகாஸ் துபே (24). இவர் தன்னை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக தமிழரான மாவட்ட ஆட்சியர் சி.இந்துமதியிடம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக தீரவிசாரிக்க முடிவு செய்த ஆட்சியர் இந்துமதி,மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார். 48 மணிநேர விசாரணைக்கு பிறகுஅதன் அறிக்கை ஆட்சியர் இந்துமதியிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை அறிக்கையில், “விகாஸை ஒரே ஒருமுறை பாம்பு … Read more
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில திறந்தநிலை பள்ளி வாரியம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வின்போது தேர்வு அறையில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க ராஜஸ்தான் கல்வித்துறையின் தேர்வு கண்காணிப்புக் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொலு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். இது தொடர்பாகத் தேர்வு கண்காணிப்புக் குழு தலைவர் நிஷி ஜெயின் கூறுகையில்: … Read more
புதுடெல்லி: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 62-ல் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அங்கு 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இதில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி அதிகஇடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2017 மற்றும் 2022-ல் நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. வரும் 2027-ல் நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்க … Read more
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 100% கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சதவீத கட்டாய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கன்னட அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கர்நாடக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும் … Read more
ராஞ்சி: அசாமில் மாறிவரும் மக்கள் தொகை தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றும், மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை தற்போது 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது என்றும் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார். ராஞ்சியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா கூறுகையில், “மாறிவரும் மக்கள் தொகை எனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அசாமில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை 40 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 1951-ம் ஆண்டு அது 12 சதவீதமாக இருந்தது. நாங்கள் … Read more
பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துவதற்கான மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில பெரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி அளித்துள்ளார். கர்நாடகாவில் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை பணியில் அமர்த்தும்போது, நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் … Read more
மும்பை: வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் மகாராஷ்டிர இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக தயாராகி வருகிறது. ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு வாக்காளர்களை கவர, வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏரளமான சலுகைகளை … Read more
பெங்களூரு: பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்புகளின் எதிரொலியாக, கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவை நிறைவேற்றும் முடிவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது. விரிவாக ஆலோசிக்கப்பட்ட பிறகு, … Read more