மகளுக்கு தவறான பாதையை காட்டியதாக தாயை கேலி செய்த ஊர் மக்கள் – சோகத்தை கடந்து சாதித்த அர்ச்சனாதேவி

புதுடெல்லி, ஜூனியர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் 18 வயதான அர்ச்சனா தேவி, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ரதாய் புர்வா என்ற கிராமத்தை சேர்ந்தவர். தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே புற்றுநோய்க்கு தந்தையை பறிகொடுத்தவர். ஒரு நாள், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் அடித்த பந்தை எடுக்க சென்ற போது பாம்பு கடித்து அவரது சகோதரர் புத்திர்ராம் மரணம் அடைந்தார். இத்தகைய மீளா … Read more

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ராஜினாமா

புதுடெல்லி, 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், ரூர்கேலாவில் கடந்த 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 2-வது சுற்றில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-5 என்ற கோல் கணக்கில் 10-வது இடத்தில் உள்ள நியூசிலாந்திடம் தோல்வி கண்டு கால்இறுதி வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அளித்தது. அதன் பிறகு ஜப்பான், தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த இந்திய … Read more

Hardik Pandya: லக்னோ பிட்ச் குறித்து பாண்டியா அதிருப்தி..! பிசிசிஐ மீது சாப்ட் சாடல்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது 20 ஓவர் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 98 ரன்கள் மட்டுமே எடுக்க, சேஸிங் இறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. வெறும் 98 ரன்கள் என்றாலும், இந்த பிட்சில் அதனை சேஸ் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. வேகப்பந்து, சுழற்பந்து என இருமுனை தாக்குதல்களையும் எதிர்கொள்ள இரு அணி பேட்ஸ்மேன்களுமே திணறினர். எப்படியோ இந்திய அணி … Read more

ஐபிஎல்லில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய 5 வீரர்கள் யார் தெரியுமா?

ஐபிஎல்லில் அதிவேக 1000 ரன்கள்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க  டி20 கிரிக்கெட் லீக் ஆகும். 2008 ஆம் ஆண்டின் முதல் பதிப்பிலிருந்தே, ஐபிஎல் லீக் பல சிறந்த வீரர்கள் வந்து சென்றதைக் கண்டது, ஆனால் சிலர் நம்பமுடியாத செயல்திறன் மூலம் போட்டியில் அழியாத முத்திரையை பதித்துள்ளனர். குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியதே அந்த சாதனைகளில் ஒன்று. இந்தக் கட்டுரையில், குறைந்த எண்ணிக்கையிலான இன்னிங்ஸில் இந்த சாதனையை … Read more

ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

போட்செப்ஸ்ட்ரூம், பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்திய அணியினருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் … Read more

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கடலூர் ஏ.சி.சி. அணி சாம்பியன்

கடலூர் கடலூர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த போட்டியில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு பெற்ற கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. நாக்அவுட் முறைப்படி நடந்த இந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு கடலூர் ஆனைக்குப்பம் ஏ.சி.சி. அணியும், கடலூர் காஸ்மோபாலிட்டன் பி … Read more

IND vs NZ: 239 பந்துகளில் ஒரு சிக்ஸர் கூட இல்லை! ஆடுகளத்தை கேலி செய்யும் ரசிகர்கள்!

India vs New Zealand 2nd T20: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது, ஆனால் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்தார். டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஆடுகளம் இது இல்லை எனவும் கூறினார்.  இந்திய பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் (2-7), யுஸ்வேந்திர சாஹல் (1-4), குல்தீப் யாதவ் (1-17), தீபக் ஹூடா (1-17), … Read more

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20: இந்தியா போராடி வெற்றி – 30 ஓவர்கள் வீசிய சுழற்பந்து வீச்சாளர்கள்

லக்னோ, இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக உம்ரான் மாலிக்குக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டிவான் கான்வேவும், பின் ஆலெனும் நியூசிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். ஆடுகளம் சுழல் ஜாலத்துக்கு கைகொடுக்க, இந்திய பவுலர்கள் மிரட்டினர். பின் ஆலென் (11 ரன்) யுஸ்வேந்திர சாஹலின் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் 343 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து தென்ஆப்பிரிக்கா வெற்றி

புளோம்பாண்டீன், இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் சேர்த்தது. ஹாரி புரூக் 80 ரன்களும் (75 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்களும் (82 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), மொயீன் அலி 51 ரன்களும் விளாசினர். அடுத்து 343 ரன்கள் இலக்கை … Read more

பழனி மாணவ-மாணவிகள் சாதனை

திண்டுக்கல் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். வயது, எடை அடிப்படையில் போட்டிகள் தனித்தனியாக நடந்தன. இதில் பழனியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்றனர். அதன்படி 53 கிலோ எடைப்பிரிவில் மாணவி ரோகினி, 65 கிலோ எடைப்பிரிவில் இலக்கிய கலைச்செல்வி, 73 கிலோ எடைப்பிரிவில் சங்கீதா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். … Read more