இந்த 6 மாவட்ட மக்கள் உஷார்.. கனமழை வெளுக்கும்! வானிலை ஆய்வு மையம்
TN Rain Alert: மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TN Rain Alert: மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்பூர்வமான தரவுகள் தேவை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அடம் பிடிப்பது வரலாற்றின் மீதோ, அறிவியல் மீதோ இருக்கும் அக்கறையினால் அல்ல. ஆர்.எஸ்.எஸ்-பாஜக பரிவாரம் புராணங்களின் அடிப்படையிலும், புனைகதைகளின் அடிப்படையிலும் … Read more
Naan Muthalvan scheme : நான் முதல்வன் திட்டம் குறித்து சென்னை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
சிதம்பரம்: “திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணியை குலைக்க முயற்சிக்கிறார்கள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜனநாயக பேரவை நிர்வாகியின் மகளின் திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 14-ம் தேதி திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில், அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுகிற ‘மதசார்பின்மையை காப்போம்’ மாபெரும் பேரணி … Read more
சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்) வாகனங்களை ஒழுங்காக வரிசைப்படுத்தாததால், மீண்டும் இடநெருக்கடி பிரச்சினை தலைதூக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையில், விம்கோ நகர் – விமானநிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் உள்ள நிலையங்களுக்கு பயணிக்க, ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையத்தில் மாறிக் கொள்ளும் வசதி இருப்பதால், இந்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ‘ஹவுஸ்புல்’ – ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இடதுபக்க பார்க்கிங் பகுதியில் 1,300 … Read more
சென்னை: நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்ட பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை, ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். … Read more
சென்னை: விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை வழங்கி, 33,312 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 3 லட்சத்து 76,443 பேருக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களுக்காக புதிதாக … Read more
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது, மாவட்ட கலெக்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சுயமாக சிந்திக்கக் கூடியவர். பாஜகவுடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அவர், கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பது கேள்விக்குறி என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார். பாளையங்கோட்டையில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை, வங்கிகளுடன் இணைக்கும் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. ரூ.10 லட்சம் கோடி தந்தோம், ரூ.20 லட்சம் கோடி தந்தோம் என்று … Read more
சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் பழனிசாமி கையெழுத்திட்டது தவறு. அதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு புகழேந்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 2 வேட்பாளர்களின் மனுக்களில், ஏ மற்றும் பி படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி கையெழுத்திட்டதை ஏற்க கூடாது. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தலைமை தேர்தல் … Read more