சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ கட்டுமானம் சரிந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். மேலும், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். இத்தடத்தில் போரூர் முதல் சென்னை வர்த்தகம் மையம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில்,இத்தடத்தில் ராமாபுரம் அருகே … Read more

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர்: 12 மாவட்டங்களில் 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்

மேட்டூர்: ​கா​விரி டெல்டா பாசனத்​துக்​காக, மேட்​டூர் அணையி​லிருந்து முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தண்​ணீரை திறந்து வைத்​தார். டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணையி​லிருந்து ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். நடப்​பாண்டு அணை​யில் போதிய தண்​ணீர் இருப்பு உள்​ள​தால், அணையி​லிருந்து ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​திருந்​தது. இதன்​படி, மேட்​டூர் அணை​யில் இருந்து நேற்று காலை 9.45 மணி​யள​வில் டெல்டா பாசனத்​துக்கு மு.க.ஸ்​டா​லின் தண்​ணீரை திறந்​து​வைத்​து, அணையி​லிருந்து சீறிப்​பாய்ந்து வெளி​யேறிய நீரில் மலர்​களைத் தூவி​னார். … Read more

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் … Read more

ராமாபுரம் விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை: சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், அதன் இணைப்புப் பாலம் சரிந்து … Read more

“பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவி தரப்பு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தி இருக்கிறேன்” – அண்ணாமலை

கோவை: “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பை மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்,” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் என்ன வாக்குறுதிகள் அளித்தோம். அவற்றை எவ்வாறு நிறைவேற்றி உள்ளோம் என்பதை மக்களிடம் தெரிவிக்கவே … Read more

புதுவையில் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது: அதிமுக

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தாதது கண்டிக்கத்தக்க ஒன்று என அதிமுக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பட்டியலினத்தவர், சமுதாயத்தில் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் ஏற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அம்பேத்கரின் எண்ணப்படி, சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் தரமாக கல்வி பயில வேண்டும் என மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை … Read more

தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பணியாற்ற விருப்பமா? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பணியாற்றுவதற்கான பயிற்சியை கொடுக்கும் தமிழ்நாடு அரசு, இந்த படிப்பில் சேருபவர்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித் தொகையும் கொடுக்கிறது. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

"நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்" – சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சேலம்: “விவசாயிகள் இனி, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131, சன்ன ரகத்துக்கு ரூ.156 என கொள்முதல் விலை இனி உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.1,649 கோடியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “டெல்டா பாசனத்துக்கு, … Read more

முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள்: அனைத்து சாதி அர்ச்சகர்கள் சங்கம் வழக்கு

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்யதுள்ளது. மதுரை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் அதற்கு எதிராக இந்து முன்னணி … Read more

டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் 

சேலம்: “டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.1,649 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மடைமாற்றம் செய்து விட்டதாக ஆட்சியை குறை சொல்லி, … Read more