“கும்பகோணம் கலைஞர் பல்கலை.க்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை” – முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு
தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 16) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரையில், “மாமன்னர் இராசராசன் ஆட்சி … Read more