தம்பி விஜய் வாயை திறந்துவிட்டாரா…? ராகுலுக்கு சப்போர்ட் – கிண்டலடித்த தமிழிசை

Tamilisai Soundararajan: தவெக தலைவர் விஜய் வாயை திறந்துவிட்டாரா?, அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? தற்போது யார் அவரை எழுப்பிவிட்டது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார்.

“அதிமுக ஆட்சி அமைந்ததும் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம்!” – கிருஷ்ணகிரியில் இபிஎஸ் உறுதி

கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும், மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது 3-ம் கட்ட சுற்றுப்பயணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கியது. ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் திறந்த வாகனத்தில் பேசிய அவர் கூறியது: “மலர் விவசாயிகளுக்காக, ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் … Read more

தூய்மை பணியாளர் போராட்டம்: "தவெக துணை நிற்கும்.. சேகர்பாபு திமுகவுக்கு எதிராக செயல்படுகிறார்"!

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வெற்றிப் பெறுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் பக்கபலமாக துணை நிற்கும் எனவும் சட்டரீதியாக மட்டுமன்றி தேவையான அனைத்து உதவிகளுக்கு கட்சி துணைநிற்கும் என விஜய் கூறி உள்ளார். 

புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை முற்றுகையிட்ட மகளிர் காங்கிரஸார்!

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் அதன் ஊழியரால் சென்னை கல்லூரி மாணவர் குத்தி கொல்லப்பட்டார். மற்றொரு மாணவர் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், வழிபாட்டுதலங்கள் அருகே உள்ள ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்டோர் நேருவீதி-காந்தி … Read more

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: "வெற்று விளம்பர மாடல் திமுக".. தவெக விஜய் அட்டாக்!

தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

தூய்மைப் பணியாளர்கள் உடன் பனையூரில் விஜய் சந்திப்பு – போராட்டத்துக்கு ஆதரவு

சென்னை: சென்னையில் 11 நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் குழுவை பனையூரில் அவர் சந்தித்துப் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களில் சிலர் இன்று தவெக தலைவர் விஜயை சந்தித்தனர். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை தவெக ஆதரிப்பதாக அவர்களிடம் விஜய் கூறினார். சென்னை பனையூரில் உள்ள தவெக … Read more

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக விநியோகிக்க நிதியில்லை என்று கைவிரிப்பது தான் திராவிட மாடல் அரசின் தமிழ்ப்பற்றா என நயினர் நாகேந்திரன் கூறி உள்ளார்.   

ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்

சென்னை: ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் … Read more

112 அடி கிணறு காணவில்லை.. 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

5 ஏக்கர் நிலத்திற்கு பாசன நீர் வழங்கிய 112 அடி கிணற்றை காணவில்லை என கூறி 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் மனு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை ரூ.276 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more