தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக விநியோகிக்க நிதியில்லை என்று கைவிரிப்பது தான் திராவிட மாடல் அரசின் தமிழ்ப்பற்றா என நயினர் நாகேந்திரன் கூறி உள்ளார்.   

ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்

சென்னை: ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் … Read more

112 அடி கிணறு காணவில்லை.. 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

5 ஏக்கர் நிலத்திற்கு பாசன நீர் வழங்கிய 112 அடி கிணற்றை காணவில்லை என கூறி 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் மனு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை ரூ.276 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவிடம் கருத்துகளை வழங்குவதற்கு பல்வேறு அரசு ஊழியர்களின் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது. 

பாமக யுத்தக் களம் – வெல்லப் போவது ராமதாஸா, அன்புமணியா?

ராமதாஸ் – அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கவலையில் உள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை அறிவித்தார் ராமதாஸ். மேடையிலேயே இதனை வெளிப்படையாக கடுமையாக எதிர்த்தார் அன்புமணி. அப்போது பற்றி எரியத் தொடங்கிய நெருப்பு … Read more

M.Ed சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்: அமைச்சர் கோவி. செழியன்

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணவர்கள் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் 20.08.2025 வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் … Read more

‘தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக’ – முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை: “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல, மக்கள் அளித்த … Read more

சுதந்திர தினத்தையொட்டி பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் கட்டணச் சலுகை அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், பயணிகள் அனைவருக்கும் கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, இன்றுமுதல் (ஆக. 11) வரும் 15-ம் தேதி வரை இணையதளம், செல்போன் ஆப், டிக்கெட் கவுன்ட்டர்கள் உட்பட அனைத்து விதங்களிலும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. உள்நாட்டு … Read more

2026ல் பாமக – திமுக கூட்டணி? ராமதாஸ் சொன்ன முக்கிய பதில்!

தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், 10.5சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் போராடுவதற்கு தயார், வன்னிய மகளிர் பெருவிழாவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு.