''பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது'': வைகோ

மதுரை: “பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50 வது நினைவு தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: “சமூக நீதியின் வடிவமாக பெரியார் திகழ்கிறார். பெரியாரால் உலகெங்கும் சமூக நீதி தழைத்துள்ளது. அவரை இளைஞர்கள் அதிகளவில் … Read more

“தமிழகம் மீண்டெழ மத்திய அரசு உதவும் என பிரதமர் உறுதி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு என அடுத்தடுத்த இரண்டு இயற்கை பேரிடரில் இருந்து தமிழகம் மீண்டெழ மத்திய அரசு உதவும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடன் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்துக் கேட்டறிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்னை அழைத்திருந்தார். கடும் நிதி நெருக்கடிக்கிடையே … Read more

முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசிய பிரதமர் மோடி… முழு பின்னணி இதோ!

PM Modi Called MK Stalin: மிக்ஜாம் புயலுக்கு அடுத்த தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக அழைத்து பேசியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திரைப்படமாகும் மலைவாழ் பெண்களின் சடங்கு ஒழிப்பு பற்றி பேசும் குறும்படம்

சிவகங்கை: மலைவாழ் பெண்கள் மத்தியில் நிலவும் ஒழிக்கப்பட வேண்டிய சடங்கு குறித்து எடுக்கப்பட்ட குறும்படமான ‘சிதை’, தற்போது திரைப்படமாக தயாராகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஜெ.ராமச்சந்திரன் என்பவரின் மகன் கார்த்திராம் (34). இவர் ‘துணிவு’ பட இயக்குநர் வினோத், கன்னட பட இயக்குநர் அய்யப்ப பி ஷர்மா ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கிய ‘சிதை’ குறும்படம் 630 விருதுகளைப் பெற்றுள்ளது. திருமணமாகும் வரை பெண்கள் கன்னித்தன்மையோடு இருப்பதற்கு பழங்குடியினர் இடையே நிலவும் … Read more

'உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி இல்லை… கத்துக்குட்டிதான்' – எல்.முருகன்

Tamil Nadu Latest News: உதயநிதி பக்குவப்பட்ட தலைவராக நடந்து கொண்டு மத்திய அரசுடன் இணைந்து வேலை செய்யும்போது, தமிழ்நாடு அரசுக்குதான் நல்ல பலன் கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார். 

தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்கி இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் மிக்ஜாம் புயலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததன் காரணமாக கனமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. நிவாரணப் பணிகளும் காலதாமதமாக திட்டமிடல் இன்றி மூன்று நாட்கள் கழித்துதான் துவங்கப்பட்டன. குறிப்பாக, … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (டிச.24) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி … Read more

மழை வெள்ளத்தால் பாதித்துள்ள 4 மாவட்டங்களுக்கு 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் விநியோகம் – அமைச்சர் மா.சு தொடங்கிவைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரூ.20.16 லட்சம் செலவில் 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் விநியோகிக்கும் பணியை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. “தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களும் நீரினால் பரவும் நோய்களிலிருந்து … Read more

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் 328 குளங்களில் உடைப்பு – தலைமைச் செயலாளர் தகவல்

திருநெல்வேலி: “கனமழையால், மொத்தமாக 750 இடங்களில் குளங்கள், கண்மாய் உள்ளிட்டவைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், மொத்தமாக 328 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகள், நீர்த்தேக்கங்கள், நீரேற்று நிலையங்கள் மற்றும் அங்கு நடைபெற்று வரும் … Read more

தூத்துக்குடி வரும் நிர்மலா சீதாராமன்..! பின்னணி இதுதான்..!

Nirmala Sitharaman to visit Tuticorin: கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 26 ஆம் தேதி வருகிறார். அவர் தமிழ்நாடு வருவதற்கான பின்னணி இதுதான்.