தென் மாவட்டத்தில் அரசு என்ன செய்கிறது…? முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கம்!

Tamil Nadu Latest News: தென் மாவட்ட மக்கள் இன்னும் அவதியுற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) அங்கு அரசு நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“மழை நிவாரணப் பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தருமபுரி: தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தருமபுரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று (டிச., 23) தருமபுரி ரோட்டரி அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளை கடந்த மூன்று மாதங்களாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி … Read more

'நிர்மலா சீதாராமன் சொன்னது தவறானது…' ஒரே போடாக போட்ட தமிழக அமைச்சர்!

Tamil Nadu Latest News: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து வருகிறார் என அமைச்சர் முத்துசாமி பேசி உள்ளார். 

தமிழத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் (இன்று) 23.12.2023 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், … Read more

'நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா…' நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி!

Tamil Nadu Latest News: பாஜகவின் ஒன்பதரை வருட ஆட்சியே ஒரு பேரிடர் என்பதால் தான் தற்போது வரை இந்த வெள்ள பாதிப்பை பேரிடர் என்று ஏற்க மறுக்கிறார்களோ என மத்திய அரசை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடி உள்ளார்.

வெள்ளம் வடிய வடிய வெளிவரும் பாதிப்புகள் – நிர்கதியில் தூத்துக்குடி மக்கள், முடங்கிய தொழில் துறை!

வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகே ஒரு பாலமே முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வசவப்பபுரம் முதல் தூத்துக்குடி துறைமுகம் வரை சாலையில் பல இடங்களில் கடுமையான … Read more

திருச்சி விமான நிலைய புதிய முனையம் ஜன.2-ம் தேதி திறப்பு? – பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.951 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட புதிய முனைய திறப்பு விழா ஜன.2-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார். திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் புதிய முனையம் கட்ட இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்கான கட்டுமானப் பணிகளை 2019 பிப்.10-ம் தேதி … Read more

புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மீண்டும் உயருகிறது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 75 காசுகள் வரை அதிகரிக்கும். தொடர்ந்து ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க துணைநிலை ஆளுநர் … Read more

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு: முழு வீச்சில் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள்

தூத்துக்குடி/ திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேரும் என மொத்தம் 55 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையும், அதைத்தொடர்ந்து தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்த … Read more

தென்மாவட்ட வெள்ள நிவாரண பணிகளில் மெட்ராஸ் இன்ஜினீயர் குரூப் ‘தம்பிகள்' ஈடுபடுத்தப்படுவார்களா?

சென்னை: பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இந்தியா வந்தபிறகு, ‘மெட்ராஸ் பிரெசிடென்சி‘ உருவாக்கப்பட்டது. இதற்கென மெட்ராஸ் பிரெசிடென்சி ராணுவமும் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பிரிவாக ‘மெட்ராஸ் இன்ஜினீயர் குரூப்’ என்ற, ராணுவத்துக்கு உதவி புரியும் ராணுவ பொறியாளர் படைப் பிரிவு 1780-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்படை பிரிவின் பிரதான பணி, பாலங்கள், சாலைகள் அமைப்பது, சாலைகளில் உள்ள தடைகளை நீக்குவது, சுரங்கங்களில் போக்குவரத்து தடைகளை நீக்குவது மூலம் படைகள் முன்னேறிச் செல்ல உதவுவது போன்றவையாகும். சுதந்திரத்துக்கு முன்பு வரை … Read more