“பேரிடரில் யார் நல்லது செய்தாலும் திமுக வரவேற்கும்” – ஆர்.எஸ்.பாரதி கருத்து @ ஆளுநர் ரவி ஆய்வுக் கூட்டம்

திருப்பூர்: “ஆளுநரின் ஆய்வுக் கூட்டம் தொடர்பாக விமர்சிக்க விரும்பவில்லை” என்று திருப்பூரில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா புகைப்பட கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள கே.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா புகைப்பட கண்காட்சியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு … Read more

தென்மாவட்டங்களில் 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்க வைப்பு; தூத்துக்குடியில் வடியாத வெள்ளம்!

சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் பால் விநியோகம் ஓரிரு நாட்களில் சீராகும். தூத்துக்குடியில் பால் விநியோகம் சீராக தாமதமாகும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த இரண்டு நாட்களாக, குறிப்பாக டிச.17-ம் தேதி காலை தொடங்கி, டிச.18-ம் தேதி மதியம் வரை வரலாறு … Read more

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – வேடிக்கைப் பார்க்க, செல்ஃபி எடுக்க கூடாதென மதுரை போலீஸ் எச்சரிக்கை

மதுரை: மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, செஃல்பி எடுக்கவோ வேண்டாம் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வைகை அணைக்கு கடந்த 17-ம் தேதி வெறும் 1,811 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வைகை ஆறு, பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பெரியாறு அணைக்கும், வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை 17,197 கன அடியாக … Read more

“ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 13.12.2023-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைக்குள்- வெடித்து வெளிப்படும் வண்ணப் புகைக்கும் குப்பிகள் வீசப்பட்டன. இதனையொட்டி நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாட்டின் படுதோல்வி வெளிப்பட்டது. … Read more

தென்மாவட்ட மழை பாதிப்பு: மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை

சென்னை: தென்மாவட்ட கனமழை பாதிப்பு மற்றும் அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறையின் உயர் அதிகாரிகள் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்திய ராணுவம், விமானப் படை, கப்பல்படை, தேசிய பேரிடர் மீடப்புப் படை, இநிதிய வானிலை மையம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்ட … Read more

மின்கட்டண உயர்வை ஓரளவாவது குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தொழில்துறையைக் காக்க மின்கட்டண உயர்வை ஓரளவாவது குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2022ம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நிறுவனங்களின் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதையும் அரசு திரும்பப்பெற வேண்டும் என்று எட்டாவது முறையாக அந்த அமைப்புகள் போராட்டம் … Read more

பொன்முடி விடுதலை ரத்து… அமைச்சரவையில் வரப்போகும் மாற்றம்?

Tamil Nadu cabinet reshuffle: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டில் அமைச்சர் பொன்முடியின் விடுதலையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் வழக்கின் தண்டனை விபரங்களை டிசம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கிறது.  

சொத்து குவிப்பு வழக்கு | அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து; டிச.21-ல் தண்டனை விவரம்: ஐகோர்ட்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21-ம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி … Read more

கருவில் இருந்தே துரத்திய பகை..! 19 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த மகன்!

தந்தையை கொன்றவரின் மகனை 19 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக படுகொலை செய்த இளைஞரின் செயல் மதுரையையே அலறவிட்டுள்ளது.    

ஸ்ரீவைகுண்டம் | ரயிலில் சிக்கியுள்ள பயணிகள் இன்று மாலைக்குள் மீட்பு – ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகள் இன்று (டிச.19) மாலைக்குள் பத்திரமாக மீட்கப்படுவார்கள், அவர்களை அழைத்துச் செல்ல 13 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. மழை வெள்ளம் கரை காரணமாக … Read more