நெல்லையில் அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 615 மி.மீ. மழைப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் ஞாயிறு காலை 8.30 மணி முதல் திங்கள்கிழமை காலை 6.30 மணிவரையிலான நேரத்தில் அதிகபட்சமாக 615 மி.மீ. மழை பதிவாகியிருந்து. மழைப்பதிவு விவரம்: மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் இந்நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 430.20, சேரன்மகாதேவி- 412.40, மணிமுத்தாறு- 324.80, நாங்குநேரி- 333.20, பாளையங்கோட்டை- 442, பாபநாசம்- 352, ராதாபுரம்- 278, திருநெல்வேலி- 310.40, சேர்வலாறு அணை- 276, கன்னடியன் அணைக்கட்டு- 406, களக்காடு- 322.20, கொடுமுடியாறு- 304, நம்பியாறு- … Read more

தென்மாவட்ட வெள்ளம் | ‘மின் விநியோக சீரமைப்புக்கு 5,000 பேர் களப்பணியில் தீவிரம்’

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சீரான மின்சாரம் வழங்க 3 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 5,000 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியது: தென்மாவட்டங்களில் பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்க மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கனமழையால் ஒரு சில இடங்களில் ஏதேனும் மின்தடங்கல் ஏற்பட்டாலும், அதற்கான காரணங்களை … Read more

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் நெல்லை: தாமிரபரணி கரையோர மக்கள் பரிதவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி: அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரம் திங்கள்கிழமை 2-வது நாளாக தத்தளித்தது. குறிப்பாக, தாமிரபரணி கரையோர பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாயினர். மாநகரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரெட் அலர்ட் எச்சரிக்கை: திருநெல்வேலி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற இடங்களிலும் இன்றும் … Read more

‘ஆதங்கப்படுவதில் பலன் இல்லை’ – தமிழை வழக்காடு மொழியாக மாற்றக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பகவத் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே டிசம்பர் 20-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளேன். … Read more

திருநெல்வேலி: கொட்டும் மழை.. அந்தரத்தில் தண்டவாளம்.. தவிக்கும் மக்கள்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்துவரும் நிலையில், மண்ணரிப்பு ஏற்பட்டு திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.   

தமிழக கனமழை பாதிப்புகள்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் தொடர்பான செய்திக் குறிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் … Read more

30 நாட்களில் தீர்வு “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

Makkaludan Mudhalvar Scheme: பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக மக்களுக்கு சேவைகள் வழங்கும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

“வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” – டிடிவி தினகரன்

சென்னை: தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை … Read more

கனமழைக்கு இடையே டெல்லி செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின்..!

CM Stalin to attend India alliance meeting in Delhi: தென் மாவட்டங்களில் கனமழை வரலாறு காணாமல் பெய்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.     

“எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.6000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ராமதாஸ்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு பதிலாக வேதனையையும், மன உளைச்சலையும் அதிகரித்திருக்கிறது. மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.6000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து … Read more