கனமழை | கன்னியாகுமரியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் சூழந்துள்ளது. வெள்ள நீரில் சிக்கியிருப்பவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டனர். கனமழையின் காரணமாக, நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. … Read more