சென்னை வேளச்சேரியில் வெள்ள நிவாரணம் ரூ.6,000: முதல்வர் நாளை வழங்குகிறார்

சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை, சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதைஅடுத்து, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மத்திய குழுவினர் வந்து பார்வையிட்ட நிலையில், தற்காலிக நிவாரணமாக ரூ. 7,033 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 … Read more

கடலூரில் பாழான 60,000 ஏக்கர் மக்காச்சோள பயிருக்கு நிவாரணம் கிடைக்குமா?

கடலூர்: கடலுார் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லுார் வட்டாரத்துக்குட்பட்ட சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். பருவமழை தவறியதாலும், மழையின் அளவு குறைந்ததாலும் மக்காச்சோள கதிர்கள் வந்து, அதில் மணி பிடிக்காமல் போனது. அதையும் மீறி, சில இடங்களில் நன்றாக முளைத்த பயிர்கள் படைப்புழுவின் தாக்குதலால் முற்றிலுமாக அழிந்தன. வானம் பார்த்த பூமியான மானாவாரி விவசாய நிலங்களில், கடன் வாங்கி பயிரிட்ட சோளப் பயிர்கள் அழிந்து போனதால் இப்பகுதி விவசாயிகள் கடும் … Read more

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் பகுதியில் கருணாநிதி சிலை நிறுவும் திட்டம் இல்லை: அரசு விளக்கம்

சென்னை: “மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத் துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை” என்று தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் முன்பு செயல்பட்டு … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண மளிகை பொருட்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4-ம் தேதி முதல் இதுவரை 60,000 மக்களுக்கு உணவு, பால் மற்றும் 2ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகம் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் வழங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று 80,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணாநகர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் … Read more

காசி தமிழ் சங்கமம் 2.0 | சென்னையிலிருந்து முதல் குழுவின் பயணத்தை தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை: இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் வரும் டிசம்பர் 17 முதல் 30 வரை காசியில் நடைபெறுகிறது. இதற்காக 216 பேர் அடங்கிய முதல் குழுவின் பயணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம், வரும் டிசம்பர் 17 முதல் 30 வரை காசியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கங்கை நதியின் பெயரில் அமைந்த முதல் குழுவில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்கள் அடங்கிய 216 கொண்ட குழுவினர் … Read more

எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் கழிவுகள் அகற்றம்: தமிழக அரசு

சென்னை: எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 276 பீப்பாய்களில் 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் படிந்து, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் … Read more

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு: தமிழக அரசின் புதிய நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் தொடர்பாக புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தலைமையில் பதிவுத்துறை தலைவரை உள்ளடக்கிய அலுவலர் குழுவானது, கர்நாடகா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறை குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், அதன் தொடர்ச்சியாக கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டங்கள் அரசாணை (நிலை) எண். 131, வணிகவரி மற்றும் பதிவுத்துறை … Read more

“தென்காசியில் வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைப்பதை நிறுத்துங்கள்” – சீமான்

சென்னை: “தென்காசி நகரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வகையில் பாட்டாக்குறிச்சி வனப்பகுதியில் திமுக அரசு அமைத்து வரும் விளையாட்டு வளாகப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க தென்காசியின் பல்லுயிர் பெருக்கச்சூழலையும், இயற்கை அழகையும் அழித்தொழிக்கும் திமுக அரசின் முயற்சியே ஆகும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி கிராமம் அருகில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகளை அழித்து, தமிழக … Read more

கேரளாவில் கரோனா | தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த அரசு அறிவுறுத்தல்

சென்னை: “கேரளாவில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய அளவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: … Read more