பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை: துரைமுருகன் தகவல்

வேலூர்: பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவு நீர்மட்டத்தை உயர்த்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு , நடப்பாண்டுக்கான கரும்பு அரவை பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூறும்போது, ‘‘சென்னையைச் … Read more

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரின் மூலம் இரண்டு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. மண் கரைகளால் ஆன கீழ்பவானி வாய்க்காலின் பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்காக 2020-ம் ஆண்டு ரூ.710 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்து கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த … Read more

விபத்து இல்லாத ரயில் பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில் ‘கவச்’ தொழில்நுட்பம்: தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை: தமிழகத்தின் முக்கியமான வழித்தடங்கள் உட்பட தெற்கு ரயில்வேயில் 474 கி.மீ. தொலைவுக்கு தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான ‘கவச்’ தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ‘விபத்து இல்லாத ரயில் பயணம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின்கீழ் ‘கவச்’ எனப்படும் பாதுகாப்பு முறை உருவாக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கவச் (கவசம்) தொழில்நுட்பம் என்பது தானியங்கி ரயில் பாதுகாப்பு முறை ஆகும். ரயில்வேயின் ஆராய்ச்சி … Read more

டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசைக் காற்றில்நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களிலும், நாளை (டிச. 16) பெரும்பாலான இடங்களிலும், வரும் 17-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, … Read more

எண்ணூர் எண்ணெய் கழிவுகளை சிபிசிஎல் டிச.17-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை டிசம்பர் 17-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சிபிசிஎல் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.18-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது, அதுதொடர்பான அறிக்கையை சிபிசிஎல், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை … Read more

“இந்தி… தேசிய மொழியல்ல!” – கோவா விமான நிலைய சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?” என்று கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவா விமான நிலையத்தில் … Read more

கள்ளக்குறிச்சி எஸ்பி சமய் சிங் மீனா – தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப்பும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி சமய் சிங் மீனாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு ஏடிஜிபி கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பணியில் இருந்து வரும் … Read more