மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகளை 2025 டிசம்பரில் முடிக்க இலக்கு

மதுரை: மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமானப்பணிகள் 2025-ம் ஆண்டு டிசம்பரில் நிறைவடை்நது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. கால் நூற்றாண்டு போக்குவரத்து நெரிசல் போராட்டத்துக்கு இந்த மேம்பாலத்தால் தீர்வு ஏற்பட உள்ளது. மதுரை மாநகரின் கோரிப்பாளையம் பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.190 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் தமுக்கம் மைதானம் முன்பிருந்து தொடங்கி கோரிப்பாளையம் வழியாக ஏவி மேம்பாலத்துக்கு இணையாக மீனாட்சி கல்லூரி வழியாக சிம்மக்கல் … Read more

பழநி குளத்தில் இருந்து பாசனத்துக்கு கழிவுநீர் கலந்த தண்ணீர்: விவசாயிகளுக்கு தோல் பிரச்சினை அபாயம்

பழநி: பழநி வையாபுரி குளத்தில் இருந்து கழிவு நீர் கலந்து வரும் தண்ணீரையே பாசனத்துக்கு பயன்படுத்துவதால் நிலம் மாசுபடுவதோடு, கை மற்றும் கால்களில் அரிப்பு, தோல் வியாதி பாதிப்பு ஏற்படும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் மையத்தில் அமைந்துள்ளது வையாபுரி குளம். முன்பு பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் இடமாக இக்குளம் இருந்து வந்தது. 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் … Read more

“தேமுதிக பொதுச் செயலாளர் பதவி ‘முள் கிரீடம்’ எனக்கு!” – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சென்னை: “எனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொரு முள் கிரீடம். உண்மையாகவே நான் பதற்றமாகவும், மன அழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப் பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி இருக்கிறீர்கள்” என்று சென்னை திருவேற்காட்டில் நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர் … Read more

'மக்களுடன் முதல்வர்' திட்டம் | டிச.18-ல் கோவையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச.18 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கவுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி வகுத்துத் தந்த சமூக நீதிப் பாதையில், ஏழையெளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி, இந்தியத் … Read more

“கேரள அரசின் மெத்தனம், அலட்சியத்தால் சபரிமலையில் பக்தர்கள் பரிதவிப்பு” – இந்து முன்னணி ஆவேசம்

சென்னை: தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் திருக்கோயில்களில் பக்தர்கள் தாக்கபடுவதும், அலைகழிக்கபடுவதும் நடக்கும் நிலையில் அதற்கு சற்றும் சளைத்ததல்ல பினராயி விஜயனின் காம்ரேட் மாடல் என்பதை நிரூபிக்கிறது கேரள அரசின் செயல்பாடுகள். பக்தர்களின் பக்தியை மதிக்க தெரியாத தேவசம் போர்டும் கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

நாடாளுமன்ற ஸ்பிரே அட்டாக்… அமளியில் ஈடுபட்ட 15 பேர் சஸ்பெண்ட் – யார் யார் தெரியுமா?

MPs Suspended: மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக முன்னர் 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 எம்பி.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மிக்ஜாம் பாதிப்பு: தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி வழங்க மத்தியக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். புயல் – மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7.033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.14) தலைமைச் செயலகத்தில், மிக்ஜாம் … Read more

தமிழ் பெண்ணுக்கு கோவாவில் நடந்த இந்தி திணிப்பு… கொந்தளித்த ஸ்டாலின், உதயநிதி – என்ன பிரச்னை?

Goa Hindi Imposition Issue: கோவா விமான நிலையத்தில் தமிழ்நாடு பெண்ணிடம் இந்தி திணிப்பில் ஈடுபட்ட மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை வீரரின் செயல் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. 

இலங்கைவசமுள்ள 45 மீனவர்கள், 138 மீன்பிடிப் படகுகளை மீட்க நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைவசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி முதல்வர்,மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (டிச.14) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் … Read more

பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு… இனி விஜயகாந்துக்கு தேமுதிகவில் என்ன பொறுப்பு?

Premalatha Vijayakanth DMDK: தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுக்குழு, செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.