தமிழக அரசு குட்நியூஸ்..! வெளியூர்காரர்களுக்கும் வெள்ள நிவாரண நிதி

Cyclone Michaung disaster aid: சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்களும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் … Read more

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளும் திருமுறை திருவிழா!

10 ஆதீனங்கள் கலந்து கொள்ளும் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் மத்திய அமைசர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களுக்கான விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியான முறையில் இறுதி ஊர்வலங்களை நடத்துவது தொடர்பான விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசும், காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில், கடலூர் மாவட்டம், பண்ருட்டியில், இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் வீசப்பட்ட மாலை, அந்த வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் … Read more

தமிழகத்தில் அடுத்த மழை எப்போது? வானிலை மையம் தகவல்!

Rain Update: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.   

“வெள்ள சேதங்கள், இழப்புகளை கணக்கிட்டு வருகிறோம்” – தாம்பரத்தில் மத்தியக் குழு தகவல்

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது, “நாங்கள் சேதங்கள் மற்றும் இழப்புகளை கணக்கிட்டு வருகிறோம்” என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியுள்ளார். சென்னை வந்த மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று, இரண்டாவது நாளாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட நன்மங்கலம் பகுதியில் தேசிய பேரிடர் … Read more

ஈரோடு: காதல் மனைவி கொலை… கணவனின் நாடகத்தை கண்டுபிடித்த காவல்துறை

ஈரோட்டில் சொத்திற்காக காதல் மனைவியை கொலை செய்த கணவனை பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்  

திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை: தலைமைச் செயலாளர் விளக்கம்

சென்னை: எண்ணூர் கழிமுக பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. டிச.12 அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்நிகழ்வு 07.12.2023 அன்று சென்னை மாவட்டத்தில் ஒரு குழுவால் ஆய்வு … Read more

கார்த்திகை தீபம்: கார்த்தியை திசை திருப்பிய சிதம்பரம்.. தோல்வியில் முடிந்த தீபா பிளான்

Karthigai Deepam Today: திரும்பவும் கார்த்திக்கு போன் போட லைன் கிடைக்கிறது. எங்கே இருக்க என்று விசாரிக்க கார்த்திக் விஷயத்தை சொல்லாமல் முக்கியமான வேலையாக வெளியில் இருக்கிறேன் என்று சொல்கிறான்.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி உட்பட எண்ணெய் கசிவு ஏற்பட்டஇடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்குமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை ஒரு குழு அமைத்தது. சென்னை பெட்ரோலியம் … Read more