பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் உரிமையாளர், மனைவி முன்ஜாமீன் மனு தள்ளுபடி 

மதுரை: பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் அதன் உரிமையாளர், அவரது மனைவி ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வறு நகரங்களில் செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி மக்களிடம் மாதத் தவணைகளில் ரூ.100 கோடி அளவில் பணம் வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவர் மனைவி கார்த்திகாமதன் ஆகியோர் மீது … Read more

“ரூ 2,191 கோடிக்கே இதுவரை மழைநீர் வடிகால் பணி நிறைவு” – ‘ரூ.4,000 கோடி’ விவகாரத்தில் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: “மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ 5,166 கோடி. ஆனால், இதுவரை ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதித் தொகை இருக்கிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சிகள் மழைநீர் வடிகால் பணிகளுக்கான ரூ.4,000 கோடி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவது தொடர்பாக … Read more

“பால், குடிநீர், உணவுக்காக உயிர் போராட்டம்” – தமிழக அரசு மீது அண்ணாமலை விமர்சனம் @ சென்னை வெள்ளம்

சென்னை: “உணவுப் பண்டங்களுக்காக உயிர்ப் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. ஆவின் பாலுக்கு ஆலாய்ப் பறக்க வேண்டி இருந்தது. ஒரு தண்ணீர் கேனுக்கு 75 முதல் 100 ரூபாய் விலையில் குடிநீர்களுக்காக குட்டிக்கரணம் அடிக்க வேண்டியிருந்தது. இதற்கெல்லாம் தமிழக அரசு நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகள்தான் காரணம்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரம் ஸ்தம்பித்துப் போனது. நீண்ட அதன் தெருக்களெல்லாம் நீர்நிலைகளானது. … Read more

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழை பதிவானது. இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) இந்த மாவட்டங்களில் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன?

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 மாதங்களில் திருப்பி செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் போல் மின்சாரம் பயன்படுத்த முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் சூழல் கட்டாயமாகிறது. புதுச்சேரியில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் கடந்த 2022 பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதற்கு ரூ.251 கோடியில் மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மத்திய அரசு அனுமதி தந்தது. இதற்கு … Read more

மிக்ஜாம் பாதிப்பு: சென்னையில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சனிக்கிழமை ஆய்வு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சனிக்கிழமை சென்னை வருகிறார். மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை மீண்டு வருகிறது என கூறினாலும், வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் … Read more

மிக்ஜாம் பாதிப்பு | சேதமான வாகனங்களுக்கு விரைந்து காப்பீட்டுத் தொகை வழங்க நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான வாகனங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் சேதமடைந்துள்ளன. காப்பீடு செய்யப்பட்ட சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவாக காப்பீட்டுத் தொகையை வழங்குவதை உறுதி … Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்க கோரிக்கை

Cyclone Michaung In Chennai: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய பொதுமக்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் விழுந்து 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் இருவர் கைது

சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து இரு தொழிளாலர்கள் உயிரிழந்த வழக்கில் கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் கட்டுமான பணியிட மேற்பார்வையாளர் ஆகியோரை கைது செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: டிச.4 அன்று 7.30 மணியளவில் கிண்டி – ஐந்து பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG பங்கின் கண்டெய்னராலான … Read more

வேளச்சேரி கண்டெய்னர் விபத்து: கட்டுமான மேற்பார்வையாளர்கள் கைது

வேளச்சேரி ராட்சத பள்ளம் விபத்து தொடர்பாக காவல்துறையினர் கட்டுமான மேற்பார்வையாளர்கள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமான அனைவரது மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.