மிக்ஜாம் பாதிப்பு | நடைபாதை வியாபாரிகளின் சிறப்பு கடனுதவிக்கு நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு சிறப்பு கடனுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: “மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னை, தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடியிலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்களை விற்பனை … Read more