61 தூண்களுடன் 2 கி.மீ நீளம்; ரூ.190 கோடியில் அமையும் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப்பணி தொடக்கம்

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் கால்நூற்றாண்டாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரூ.190 கோடியில் அமையும் மேம்பாலம் கட்டுமானப்பணி தொடங்கியது. 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன் மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமைகிறது. மதுரை மாநகரை வைகை ஆறு வட மதுரை, தென் மதுரை ஆகிய இரு நகரப்பகுதிகளாக பிரிக்கிறது. மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி அம்மன் கோவில் ரயில்வே நிலையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. … Read more

ஈரோட்டில் பட்டியலின இளைஞர்களைத் தாக்கியவர்களை கைது செய்க: மார்க்சிஸ்ட்

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து இக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 – 2023 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய … Read more

குரோம்பேட்டையில் பயங்கரம்! காதலியை கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்!

கேரளா மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடி, சென்னை குரோம்பேட்டையில் தனியார் ஓட்டலில் அறை எடுத்து தனிமையில் தங்கியிருந்துள்ளனர். 

மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: டிசம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவினர் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை / கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு முன்னெச்சரிக்கை … Read more

எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு – மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

“எய்ட்ஸ் பாதித்தோருக்கு மாத உதவித் தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்” – புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நூறடி‌‌ சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்லூரி மாணவ – மாணவியருக்கிடையே மாநில அளவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் வெற்றி‌ பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும், எச்ஐவி பரிசோதனை மையங்களில் சிறந்த 5 நட்சத்திர தரச் சான்று பெற்ற மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம், … Read more

Dating App-ல் கால் கேர்ள்ஸ் தேடிய பேராசிரியர்! பல லட்சங்களை இழந்தது எப்படி?

லோகாண்டோ இணையதளத்தில் கால் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருப்பதாக விளம்பரம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியரிடம் பண மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.   

சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் – நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவினர் குழந்தைகள் திருமணங்கள் நடத்துவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா தாக்கல் செய்த மனுவில், “குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது. 1929-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் 1978-ம் ஆண்டு திருத்தம் கொண்டு … Read more

வானிலை முன்னெச்சரிக்கை: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: “அடுத்து வரும் 4 தினங்களைப் பொறுத்தவரை, வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்” என்று … Read more

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் இவை தான் – மக்களே உஷார்

தமிழ்நாட்டுக்கு மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் நிலையில், அதனால் பாதிக்கப்பட போகும் மாவட்டங்கள் எவை என்பதை பார்க்கலாம்.